தேவாரம், விஜயக்குமாருக்கு பாராட்டு, பதக்கம்
சென்னை:
சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் அதிரடிப்படை முன்னாள் தலைவர் தேவாரம், தற்போதைய தலைவர் விஜயக்குமார் உள்ளிட்டஅதிரடிப்படையினர், வனத்துறையினர் ஆகியோருக்கு பதக்கங்கள், பரிசுகளை வழங்கி முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார்.
வீரப்பனை வீழ்த்திய தமிழக சிறப்பு அதிரடிப்படையினருக்கும், அவர்களுக்கு உதவியாக இருந்த வனத்துறையினருக்கும் சென்னை நேருஉள் விளையாட்டு அரங்கத்தில் பாராட்டு விழா நடந்தது.
தற்போதைய அதிரடிப்படையைச் சேர்ந்த 745 வீரர்களும் நீண்ட திறந்த லாரிகளில் நின்று கொண்டு ஊர்வலமாக விழா நடந்தஉள்ளரங்கத்திற்கு அழைத்து வரப்பட்டனர். எழும்பூரில் உள்ள முத்துச்சாமி பாலத்திலிருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பை சாலையின்இருபுறம் ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று வீரர்களை வாழ்த்தினர்.
வீரப்பன் வேட்டையின்போது அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்ட பேனர்கள், மாதிரிகள் லாரிகளில்இடம் பெற்றிருந்தன. பின்னர் அனைத்து வீரர்களும் நேரு உள்ளரங்கம் வந்ததும் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.
சரியாக 5 மணிக்கு ஜெயலலிதா அரங்கத்திற்கு வந்தார். அவரை தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், உள்துறைச் செயலாளர் ஷீலாராணி சுங்கத், நிதிச் செயலாளர் நாராயணன், டிஜிபி கோவிந்த், சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜ், அதிரடிப்படைத் தலைவர்விஜயக்குமார் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன் பிறகு ஜெயலலிதா அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும் முதலாவதாகவீரச் செயல் பதக்கங்களை ஜெயலலிதா வழங்கினார்.
முதல் பதக்கம் முன்னாள் அதிரடிப்படைத் தலைவரும், டிஜிபியுமான வால்டேர் தேவாரத்திற்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்துசென்னை போலீஸ் கமிஷனரும், முன்னாள் அதிரடிப்படைத் தலைவருமான நடராஜ், தற்போதைய தலைவர் விஜயக்குமார், விழுப்புரம்டிஐஜி சஞ்சய் அரோரா, எஸ்.பிக்கள் அசோக்குமார் தாஸ், பெரியய்யா, செந்தாமரைக்கண்ணன், சண்முகவேல், சின்னச்சாமி, சப்இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை, காவலர்கள் சரவணன், குமரேசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
அதன் பின்னர் வீர தீர விழுப்புண் விருதுகளை ஜெயலலிதா வழங்கினார். இந்த விருதுகள், டிஐஜிக்கள் தமிழ்ச்செல்வன்,கோபாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் மோகன் நவாஸ், லயோலா இக்னேஷியஸ், தலைமைக் காவலர்கள் இளங்கோவன், துரைசாமி,காவலர்கள் ரவிக்குமார், விஜயக்குமார், மகேந்திரன் உள்ளிட்ட 12 பேருக்கு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிரடிப்படை வீரர்களுக்கு வீர தீர செயல் பங்கேற்பு பதக்கம் வழங்கப்பட்டது. 50 வீரர்களாக பிரிக்கப்பட்டுபதக்கங்களை வழங்கினார் ஜெயலலிதா. அனைத்து வீரர்களுக்கும் ஜெயலலிதாவை பதக்கத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பதக்கம் பெற்றவர்களுக்கு, ஏற்கனவே அறிவித்தபடி, ரூ. 3 லட்சம் ரொக்கத்திற்கான காசோலை, வீட்டு மனை ஒதுக்கீடு தொடர்பானஉத்தரவு, பதவி உயர்வுக்கான உத்தரவு ஆகியவற்றையும் ஜெயலலிதா வழங்கினார்.
பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு இடை, இடையே நடன மாஸ்டர் கலா குழுவினரின் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. 5 மணிக்குத்தொடங்கிய விழா இடைவிடாமல் இரவு 9 மணி வரை நீடித்தது. ஜெயலலிதா நீண்ட நேரம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது நீண்டஇடைவெளிக்குப் பிறகு இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
பாராட்டு விழாவின் நிறைவாக அனைவருக்கும் இன்சுவை விருந்து அளிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டு இனிப்பைசுவை பார்த்து விட்டு, அனைவரையும் திருப்தியாக சாப்பிடுமாறு கூறி விடைபெற்றுச் சென்றார்.
பாராட்டு விழாவையொட்டி நேரு ஸ்டேடியத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications