ஜெ. கொடுத்த இன்ப அதிர்ச்சி: விஜயக்குமார்
சென்னை:
வீரப்பனை வீழ்த்தி நாங்கள் தமிழக முதல்வருக்கும், தமிழக மக்களுக்கும் பெரிய அதிர்ச்சி கொடுத்தோம், ஆனால்அதை விட பெரிய அதிர்ச்சியை (பரிசுகள், பாராட்டுக்கள், பதக்கங்கள்) முதல்வர் எங்களுக்கு திருப்பிக் கொடுத்துவிட்டார் என்று ஜெயலலிதாவைப் பாராட்டினார் அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார்.
அதிரடிப்படை பாராட்டு விழாவில் விஜயக்குமார் நன்றியுரை நிகழ்த்தும்போது ஜெயலலிதாவை புகழ்ந்துதள்ளினார். அவரது பேச்சின் சுருக்கம்:
அதிரடிப்படையின் கடை நிலைக் காவலர் முதல் ஏ.சி. காரில் செல்லும் என்னைப் போன்றவர்கள் வரை ஒரே சமமாகபாவித்து, மதித்து, பாராட்டு விழா நடத்தியதைக் கண்டு மனம் மகிழ்ந்தேன், உள்ளம் குளிர்ந்தேன்.
அக்டோபர் 18ம் தேதி நடந்த சம்பவத்திற்கு முதல்வர் அவர்கள் கொடுத்த ஊக்கம், தூண்டுகோலும்தான் முக்கியக்காரணம். வீரப்பனை 20 நிமிடங்களில் கொன்று நாங்கள் தமிழக முதல்வருக்கும், தமிழக மக்களுக்கும் பெரியஷாக் கொடுத்தோம்.
ஆனால் அடுத்த நாள் 12 மணிக்குள்ளாக முதல்வர் அவர்கள் எங்களுக்கு மிகப் பெரிய ஷாக்கைக் கொடுத்துவிட்டார். அதிலிருந்து இன்னும் நாங்கள் யாரும் மீளவில்லை. எங்களது சமையல்காரர்கள், இந்த ஷாக்கிலிருந்துமீளாமல் இனி எப்படி சமைக்கப் போகிறார்களோ என்று பயமாகவும் இருக்கிறது.
வால்டேர் தேவாரம்தான் வீரப்பனைப் பிடிக்க அடித்தளமிட்டவர். அவரைப் பார்த்துத்தான் நான் ஐ.பி.எஸ்.அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டேன். தேவாரம் முதல் முறையாகஅதிரடிப்படையை உருவாக்கியபோது, அதில் இடம் பெற்றவர் சஞ்சய் அரோரா. மிகப் பெரும் வீரர், உடல்வலிமை மட்டுமல்லாது உள்ள வலிமையிலும் மாவீரர்.
இதுபோன்ற மிகப் பெரிய செயலை செய்யும்போதெல்லாம் அரசின் ஆசியும், அதீத நம்பிக்கையும், அரசியல்தைரியமும் அதிகம் தேவை. அதை எங்களுக்கு மீண்டும் மீண்டும் கொடுத்த முதல்வருக்கு இப்போது பணிவார்ந்தநன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பழக்கமில்லாத தொழில் உளவு பார்ப்பது. மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடும் இயற்கைஎனக்கு. ஆனால் என்னை உளவு பார்க்க வைத்து விட்டனர் எனது வீரர்கள். என்னை சுத்தமாக மாற்றி விட்டனர்இவர்கள்.
சூழ்ச்சியை சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும் என்பதற்கேற்ப நானும் களம் இறங்கினேன். எனக்குத் துணையாகநண்பன் செந்தாமரைக்கண்ணன், மிகச் சிறந்த தளபதி அவர், வெள்ளத்துரை, சரவணன், பாண்டிக்கண்ணன், பலமாதங்கள் காட்டுக்குள் இருந்தவர், எனக்கு அது பின்னர்தான் தெரிந்தது, குமரேசன், துரைப்பாண்டி என பலரும்என்னால் மறக்க முடியாதவர்கள்.
20 நிமிடங்களில் வீரப்பனை நாங்கள் முடித்து விட்டோம்.ஆனால் அதற்கு முன்பாக 60 விநாடிகளில் எப்படிதயாராவது என்பது குறித்து மிகப் பெரிய பயிற்சியை எங்களது வீரர்களுக்குக் கொடுத்திருந்தோம். அப்படிப்பட்டசிறந்த வீரர்களுக்கு, 60 ஆண்டு காலம் மறக்க முடியாத பரிசுகளைக் கொடுத்து விட்டார் முதல்வர். அவருக்குமீண்டும் எனது நன்றிகள் என்று கூறினார் விஜயக்குமார்.
தனது பேச்சை நிறைவு செய்யும்போது தமிழக முதல்வரைப் பாராட்டுங்கள் என்று மூன்று முறை விஜயக்குமார் கூறஅதிரடிப்படை வீரர்கள் கைகளை உயர்த்தி ஜெயலலிதாவை வாழ்த்தினர்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications