டெல்லி நெருக்கடி: சிக்கலில் லட்சுமி பிரானேஷ்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கும் இடையே நடந்த தொலைபேசிஉரையாடல் விவரத்தை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திதரமாக தாக்கல் செய்தது குறித்து டெல்லியில் நாளைஉள்துறை அமைச்சகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் விளக்கமளிப்பார் என்று தெரிகிறது.
தமிழக ஆளுநர் மாற்றம் தொடர்பாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தன்னிடம் தொலைபேசியில்தெரிவித்த தகவல்களில் சிலவற்றை தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் மூலமாக ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறி விட்டார் என்றுகூறி அவரும், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷும் பதவி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந் நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த காங்கிரஸ்கட்சியும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. நாளை டெல்லியில் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள்மாநாடு நடைபெறவுள்ளது. இதில் லட்சுமி பிரானேஷ் கலந்து கொள்ளவுள்ளார்.
அந்த சமயம், தொலைபேசி உரையாடல் விவரத்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது தொடர்பாக அவரிடம்விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. லட்சுமி பிரானேஷ் மூலம்ஜெயலலிதாவுக்குத் தலைவலி கொடுக்கவும் காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications
