வீரப்பன்: விஜயக்குமாருக்கு ஆர்.டி.ஓ. சம்மன்
தர்மபுரி:
சந்தன கடத்தல் வீரப்பனும் அவன் கூட்டாளிகளும் கொல்லப்பட்டது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம்அளிக்குமாறு விஜயக்குமாருக்கு தர்மபுரி ஆர்.டி.ஓ. சம்மன் அனுப்பியுள்ளார்.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான உண்மை நிலவரத்தை வெளியுலகுக்கு தெரிவிக்கும் வகையில்தர்மபுரி ஆர்.டி.ஓ. பிரகாசத்தை விசாரணைஅதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. இது தொடர்பாக ஆய்வு செய்துஅரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து கடந்த வாரம் அவர் விசாரணையைத் தொடங்கினார். வீரப்பனை சுட்டுக் கொன்ற போது சம்பவஇடத்தில் இருந்த அதிரடிப்படை வீரர்கள், வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி ஆகிய 4பேரின் குடும்பத்தினர், உறவினர்களை ஆர்.டி.ஓ. சந்தித்து விசாரித்தார்.
அடுத்தக்கட்டமாக பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் பணியை ஆர்.டி.ஓ. இன்று தொடங்கினார். வீரப்பன் சாவுகுறித்து பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தர்மபுரி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து தங்களுக்குத்தெரிந்ததை கூறலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இன்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உட்பட சிலர் நேரில் ஆஜராகி ஆர்.டி.ஓ.,விடம் விளக்கமளித்தனர் .நாளையும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.
இந் நிலையில் அதிரடிப்படை தலைவர் விஜயகுமார், எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் மற்றும் சம்பவ இடத்தில்இருந்த அதிரடிப்படை வீரர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறுஆர்.டி.ஓ. பிரகாசம் சம்மன் அனுப்பி இருக்கிறார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications