என்னை அரசியலுக்கு இழுக்கிறார்கள்: விஜயகாந்த்
நாகர்கோவில் :
என்னை சும்மா இருக்க விடாமல் அரசியலுக்கு இழுக்கிறார்கள் என்று நடிகர் விஜயகாந்த் கூறினார்.
நாகர்கோவில் விஜயகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சினிமா துறையினரின் கோரிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார். எனவே தமிழ் திரைப்படத்துறை சார்பில் ஜெயலலிதாவுக்கு வரும் 8ம் தேதி பாராட்டு விழா நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை.அதற்கான இடம் இதுவரை முடிவாகவில்லை.
என்னிடம் அரசியல் பிரவேசம் குறித்து கேட்காதீர்கள். எங்கு சென்றாலும் இதைத் தான் கேட்கின்றனர். இதோஅதோ என்று செய்திகள் வந்தால் என்னை முட்டாள் என்று மக்கள் நினைப்பார்கள். நேரம் வரும் போது நானேசெய்தியாளர்களை அழைத்து சொல்வேன். நான் ஒன்றும் திருட்டு கல்யாணம் நடத்தப் போவதில்லை.
நடிகர், நடிகைகளின் சம்பள விஷயத்தை பத்திரிக்கைகள்தான் பெரிதுபடுத்துகின்றன. ஒரு நடிகரின் மார்க்கெட்நிலைமையை பொறுத்து சம்பளம் தரப்படுகிறது. சம்பளம் குறைப்பது என்பது இப்போது பிரச்னையல்ல.
தியேட்டர்களில் டிக்கெட் விலையைக் அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தியேட்டர்களில் செய்யப்படும்நவீன வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பத்து ஆண்டுக்கு முன் இருந்த விலைவாசி இப்போதுஇருக்கிறதா? எல்லா பொருட்களுக்கும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது போல தியேட்டர் கட்டணமும்உயர்ந்துள்ளது என்று கூறினார்.
பின்னர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடந்த ஒரு திருமண விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டார்.அதனையடுத்து மன்றத்தின் சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டுபேசியாதவது:
சில அரசியல்வாதிகள் தங்களது தொண்டர்களை வன்முறைக்குத் தூண்டுகின்றனர். எனது ரசிகர்கள் நல்வழியில்பிறருக்கு உதவிகளையே செய்து வருகின்றனர். நம்மை (ரசிகர்களை) பொறுப்பற்றவர்கள் என்றும் கோழைகள்என்றும் சிலர் கூறிவருகின்றனர். அதை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். இப்போது ரசிகர் மன்றமாகஇருப்பது நாளை அரசியல் கட்சியாக மாறும்.
நன்மை செய்வதற்காக அரசியலுக்கு வரவேண்டும். சிலர் பிரிவினை முயற்சியில் வல்லவர்களாக இருக்கின்றனர்.
ரசிகர் மன்றத்தை வைத்து என்ன செய்யப் போகிறேன் என்று கேட்கிறார்கள். 35 ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் ஒரு அரசியல் கட்சி உருவானது. என்னை சும்மா இருக்க விடாமல் அரசியலுக்கு இழுக்கின்றனர். நான் ஒருகேள்விக்கு பதில் சொன்னால் அதை வைத்து பத்து கிசு கிசு எழுதுகின்றார்கள்.
அடுத்த முறை நான் வள்ளியூருக்கு வரும்போது வேறொரு ரூபத்தில்தான் வருவேன். நான் பதுங்கும் புலி. படுக்கமாட்டேன்; பாயத்தான் செய்வேன். நான் பேச வேண்டிய நேரத்தில் கட்டாயம் பேசுவேன் என்று விஜயகாந்த்பேசினார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications