போன் விவகாரம்: ஜெவை நம்ப மறுக்கும் ராமதாஸ்
சென்னை:
உள்துறை அமைச்சருமான தொலைபேசி உரையாடலை டேப்பில் பதிவு செய்யவில்லை என்று முதல்வர்ஜெயலலிதா கூறுவது நம்பும்படியாக இல்லை என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் நடந்த உரையாடலை பதிவு செய்யவில்லை என்றும், கவர்னர் மாற்றம்தொடர்பாக ஆதாரம் இருந்தால் கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டதால், அந்த உரையாடலை மனதில்நினைவுபடுத்தி தலைமைச் செயலாளர் லட்சுமி பிரனேசிடம் சொன்னதாகவும், அதன் சாரம்சத்தைத் தான் உச்சநீதிமன்றத்தில் தலைமைச் செயலாளரால் சமர்பிக்கப்பட்டதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் இந்த விளக்கத்தை நம்ப முடியவில்லை. முதல்வர் சில விவரங்களைக் கேட்டார், அதற்குஉள்துறை அமைச்சர் சில விஷயங்களைத் தெரிவித்தார் என்பது தான் சாரம்சம்.
ஆனால், லட்சுமி பிரனேஷ் தாக்கல் செய்த மனுவில், முதல்வருக்கும் உள்துறை அமைச்சருக்கும் இடையே நடந்தஉரையாடல் கேள்வி பதில் ஸ்டைலில் மிக விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.
மொத்தம் 14 முறை ஜெயலலிதா குறுக்கிட்டு கேள்வி கேட்டிருக்கிறார். 14 முறையும் பாட்டீல் விளக்கம்தந்திருக்கிறார்.
இந்த நீண்ட உரையாடலை, நீண்ட நேரத்துக்குப் பின் எப்படி ஜெயலலிதா நினைவுபடுத்தி தலைமைச்செயலாளரிடம் சொல்ல முடியும்?. இது எப்படி சாத்தியம்?. ஜெயலலிதாவின் இந்த விளக்கம் நம்பும்படியாகஇல்லை.
மற்றவர்கள் நம்புவது ஒருபுறம் இருக்கட்டும். இதை உச்ச நீதிமன்றம் எப்படி நம்பும்?. உச்ச நீதிமன்றத்தில்விசாரணையின்போது உள்துறை அமைச்சகம் இந்த உரையாடலை மறுத்தால் என்னவாகும்?
ஜெயலலிதா நினைவுப்படுத்தி சொல்வதை அப்படியே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா?.
டேப்பில் பதிவு செய்தால் அது சட்டரீதியில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் முதல்வர் ஜெயலலிதா இப்போதுஉரையாடலை பதிவு செய்யவில்லை என்று மறைக்கப் பார்க்கிறார்.
வெளியரங்கமாகாத அந்தரங்கமும் இல்லை, வெளிச்சத்துக்கு வராத மறைபொருளும் இல்லை என்ற முதுமொழிக்குஏற்ப, உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். அப்போது தவறு செய்தவர்கள் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications