சபரிமலை சீசன்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள்
சென்னை:
கிருஸ்துமஸ், புத்தாண்டு, சபரிமலை சீசன் ஆகியவற்றையொட்டி வரும் 12ம் தேதி முதல் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவனந்தபுரத்துக்கு...
சபரிமலை சீசனுக்காக சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் இடையே 74 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. 0635 என்றஎண் கொண்ட அந்த ரயில் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சென்னையில் இருந்து இரவு 9.15 மணிக்குப்புறப்படும்.
மறு மார்க்கத்தல் 0636 என்ற எண் கொண்ட ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து செவ்வாய், புதன், வியாழன், சனி ஆகியகிழமைகளில் இரவு 7.30க்கு சென்னைக்குப் புறப்படும்.
நாகர்கோவிலுக்கு...
அதே போல சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
0605 என்ற எண் கொண்ட இந்த ரயில் சென்னையில் இருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்குசென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் 12.30க்கு நாகர்கோவிலை அடையும்.
மறு மார்க்கத்தில் 0606 என்ற எண்ணுடன் நாகர்கோவிலில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புறப்படும். பகல் 1மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
மதுரைக்கு...
சென்னையில் இருந்து மதுரைக்கு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. 0607 என்றஎண் கொண்ட இந்த ரயில் இரவு 11 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.
மறு மார்க்கத்தில் 0608 என்ற எண்ணுடன் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த ரயில் மதுரையில் இருந்து மாலை 6.30க்குசென்னைக்குப் புறப்படும்.
இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவும் செய்து கொள்ளலாம்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications