தமிழக கவர்னராக பதவியேற்றார் பர்னாலா
சென்னை:
தமிழகத்தின் 21வது ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆந்திராவில் இருந்து தமிழக அரசின் தனி விமானத்தில் தனது மனைவியுடன் சென்னை வந்த அவரை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து வழங்கி வரவேற்றார். பின்னர் அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகளை அறிமுகம்செய்து வைத்தார்.
| பின்னர் ராஜ்பவன் வந்த அவர் தமிழக ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயரால் பர்னாலா பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக பர்னாலாவை கவர்னாராக நியமித்து ஜனாதிபதி அப்துல் கலாம் பிறப்பித்த உத்தரவை தலைமைச் செயலாளர் லட்சுமிபிரனேஷ் படித்தார். இந் நிகழ்ச்சியில் ஜெயலலிதா, அமைச்சர்கள், சபாநாயகர் காளிமுத்து, சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பேராசிரியர்அன்பழகன், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், |
திமுக, காங்கிரஸ் தலைவர்கள் பர்னாலாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின் நடந்த தேனீர் விருந்தில் பர்னாலாவுடன் ஜெயலலிதா சிறிது நேரம் தனியே பேசிக்கொண்டிருந்தார்.
முன்னதாக, ஆந்திர ஆளுநர் பதவியில் இருந்து விலகிய அவர் இன்று காலை ஹைதாராபாத்தில் இருந்து சென்னை கிளம்பினார்.அவரை முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் அமைச்சர்கள், முப்படை அதிகாரிகள் முறைப்படி வழியனுப்பி வைத்தனர்.
பர்னாலா தமிழகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆந்திர ஆளுநராக முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் மூத்தகாங்கிரஸ் தலைவருமான சுஷில்குமார் ஷிண்டே நாளை பதவியேற்கிறார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications