Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சூப்பர்: ராம்மோகன்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

Jayalalitha and Rammohan

ராம்மோகனை வழியனுப்பும் ஜெயலலிதா
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகச் சிறப்பாகவே உள்ளதாக தமிழக முன்னாள் ஆளுநர் ராமமோகன் ராவ்கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் பதவியை விட்டு விலகிய ராம் மோகன் ராவை நேற்று மாலை முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், அதிகாரிகள்வழியனுப்பி வைத்தனர். தமிழக அரசுக்குச் சொந்தமான தனி விமானத்தில் அவர் தனது சொந்த ஊரான ஹைதராபாத்துக்குப்புறப்பட்டுச் சென்றார்.

விமான நிலையத்தில் ஜெயலலிதா மலர்கொத்து கொடுத்து வழியனுப்பினார். அமைச்சர்கள் சால்வைகள் அணிவித்துவழியனுப்பினர்.

ஹைதராபாதில் நிருபர்களிடம் ராவ் பேசுகையில்,

வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப நிலை எனது 92 வயது தாயாருக்கு ஒத்துக் கொள்ளாது. அதனால்தான் அங்குசெல்ல மறுத்தேன்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்று என்னைச் சந்தித்தவர்களோ, பத்திரிக்கைகளோ கூறியதில்லை. நாட்டில்உள்ள பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிக நன்றாகவே இருக்கிறது. தமிழக அரசுடன் எனக்குசுமூகமான உறவு இருந்தது.

முதலில் கெளரவமான ஒரு பதவி கிடைத்ததற்காக மிகவும் சந்தோஷப்பட்டேன். தற்போது ராஜினாமா செய்ய வேண்டி நிலைவந்ததற்காக வருத்தப்படவில்லை.

ஆளுநர், டி.ஜி.பி. இரண்டுமே எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தன. ஆளுநராக குறுகிய காலத்திலேயே நல்ல பெயரைசம்பாதித்தேன்.

நான் ஒளிவு மறைவு இன்றி பேசுபவன். எனக்கு அரசியல் சரிப்பட்டு வராது. எனக்கு 70 வயதாகிறது. ஓய்வு காலத்தைமகிழ்ச்சியாக கழிக்க விரும்புகிறேன் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+