கர்நாடகம்: பிற மொழி படங்களுக்கு நீதிமன்றம் அனுமதி
பெங்களூர்:
கர்நாடகத்தில் பிற மொழிப் படங்களை 3 வாரங்கள் கழித்தே வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கர்நாடகத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிப் படங்களை 7 வாரம் கழித்துதான் திரையிட வேண்டும் என்று கர்நாடகதிரைப்பட வர்த்தக சபை கட்டுப்பாடு விதித்தது. இந்தக்கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டால், கர்நாடக திரைப்படத் துறைக்குஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தீர்மானம் நிறைவேற்றியது.
இதையடுத்து 7 வாரங்களாக இருந்த தடை 3 வாரங்களாகக் குறைக்கப்பட்டது. இதை எதிர்த்து சில திரையரங்கு உரிமையாளர்கள்கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,
பிற மொழிப் படங்களுக்கு விதிக்கப்பட்ட 3 வாரத் தடையால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.இது தொடர்பாக சினிமா வர்த்தகத்துறையும், விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்காமலே ஒப்பந்தம்செய்துள்ளனர். எனவே 3 வாரத் தடையை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் நசீர், 3 வாரத் தடையை ரத்து செய்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். மேலும்விசாரணையை 4 வாரங்களுக்குத் தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications