தமிழகத்தில் பிப்ரவரியில் தேர்தல்: ராமதாஸ் ஜோதிடம்

Subscribe to Oneindia Tamil

விருத்தாசலம்:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிச்சயமாக தேர்தல் வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.கோவிந்தசாமி இல்லத்தில் செய்தியாளர்களுக்கு ராமதாஸ் அளித்த பேட்டியில்கூறியதாவது:

தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து 10 சதவீத வறட்சி நிதி கூட கிடைக்காததற்கான முழு பொறுப்பையும் முதல்வர் ஜெயலலிதாதான் ஏற்க வேண்டும். வறட்சி நிவாரணத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய குழுவிடம் உரிய நேரத்தில் தமிழக நிலைமையைஎடுத்துக் கூறாததுதான் குறைவான நிதி கிடைத்ததற்கு காரணம்.

பிரதமர் மன்மோகன் சிங் பதவியேற்று 4 மாதங்கள் ஆனபோது, அவரைச் சந்தித்து வறட்சி நிவாரணத்துக்கு மனு கொடுத்தார்.அதன்பின் தமிழகம் வந்த வறட்சி நிவாரணகுழு, மழையில் நனைந்தவாறு வறட்சி பகுதிகளை பார்வையிட்டது.

அப்போதே இது தொடர்பாக நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். அதற்கு ஜெயலலிதா என் மீது ஆத்திரமடைந்து அறிக்கைவெளியிட்டார். அதன் பலனை தமிழகம் இப்போது அனுபவிக்கிறது. ஜெயலலிதாவின் பொறுப்பற்ற செயல்தான் இதற்கு காரணம்.

ஆளுநர் மாற்றக் கூடாது என்பது போன்ற தேவையற்ற பிரச்சினைகளில் காட்டும் வேகத்தை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில்காட்டவில்லை. அதிக நேரம் உழைக்கிறேன் என்று வீண் பேச்சு பேசியே மாநில நலன்களை கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்ஜெயலலிதா.

இவரைப்போல் கோட்டையில் கோட்டைவிட்ட முதலமைச்சர் யாரும் இருக்க முடியாது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் வேறு எங்கேயோ ஒதுக்கப்பட்டதால், தஞ்சை, நாகப்பட்டினம்,கடலூர், திருவாரூர் பகுதிகளில் வெள்ளச்சேதத்தை மக்கள் சந்தித்துள்ளனர். வறட்சி நிவாரணம்போல வெள்ள நிவாரணம்வழங்குவதிலும் அரசு மெத்தனம் காட்டக்கூடாது.

ஜெயலலிதா ஆளுநர் மாற்றத்தை அரசியலாக்கி விட்டார். மத்திய அமைச்சருடான உரையாடலை டேப் செய்துள்ளார். அதைதைரியமாக வெளியிட்டுள்ளார். ஆனால் இப்போது அதை மறுத்து எனக்கு நெப்போலியன்போல் நினைவாற்றல் உள்ளது என்றுகூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் வாய்ச்சவடால், வாய்பேச்சுகள்தான் உள்ளன. வருகிற பிப்ரவரி மாதம் தமிழகத்திற்கு உறுதியாக தேர்தல்வரும். புதிய ஆளுநர் பர்னாலா மக்களின் பிரச்சினைகளை கவனித்து, தமிழகத்தின் மக்கள் விரோத ஆட்சி பற்றி மத்திய அரசுக்குமுறையான தகவல்களை அனுப்பி வைப்பார் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+