பர்னாலா பதவியேற்பு; கரை வேட்டிகளின் சங்கமம்
சென்னை:
தமிழக ஆளுநராக சுர்ஜித்சிங் பர்னாலா பதவியேற்ற நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு விரோதமாக அனைத்துக் கட்சிகளைச்சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் அரசு விழா எதுவாக இருந்தாலும் அதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம்.இது நேற்று சற்று மாறியது.
கடந்த முறை ஆளுநராக ராம்மோகன் ராவ் பதவியேற்றபோது தமிழக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டனர். அதற்கு முன்பும் இதுபோலவே நடக்கும்.
ஆனால் பர்னாலா ஆளுநராகப் பதவியேற்றபோது காட்சி மாறியிருந்தது. முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் காளிமுத்து,அமைச்சர்கள் ஆகியோர் வழக்கம்போல ஆஜராகியிருந்தனர்.
இவர்கள் தவிர திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், மத்தியஅமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன்,சட்டசபைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோரும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
இதை விட ஆச்சரியமாக நிதியமைச்சர் பொன்னையன், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.மறுபக்கம், ஓ.பன்னீர் செல்வமும், சபாநாயகர் காளிமுத்துவும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தனர்.
ஆளுநர் பதவியேற்புக்குப் பின்னர் நடந்த தேநீர் விருந்திலும் இந்த காட்சி மாற்றம் தொடர்ந்தது. ஸ்டாலினுடன் காளிமுத்து பேசிக்கொண்டிருந்தார். சமீபத்தில் ஸ்டாலின் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டது குறித்தும், இப்போது எப்படி உள்ளது என்றும்அக்கறையாக விசாரித்துக் கொண்டிருந்தார் காளிமுத்து.
எதிரும் புதிருமாக இருப்பவர்கள் இப்படி இயல்பாக பேசிக் கொண்டிருந்தது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications