சட்டம்-ஒழுங்கு: பர்னாலாவிடம் ஜெ. நேரில் விளக்கம்
சென்னை:
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சந்தித்துப் பேசினார். தமிழக சட்டம்-ஒழுங்கு நிலைகுறித்து பர்னாலா விளக்கம் கேட்டதால், இச் சந்திப்பு நடந்துள்ளது.
தமிழக புதிய ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். பதவியேற்பு விழா முடிந்து 2 நாட்களாகியுள்ளநிலையில் இன்று ஜெயலலிதா, பர்னாலாவை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி சந்திப்புக்குப் பின்கவர்னர் மாளிகையின் வெளியே நிருபர்களிடம்பேசிய ஜெயலலிதா,
புதிய கவர்னரை மரபுப்படி சந்தித்துப் பேசினேன். தமிழக நிலவரம் (சட்டம், ஒழுங்கு?!), பொருளாதார நிலை குறித்து ஆளுநர்விளக்கம் கேட்டார். அது குறித்து அவரிடம் விளக்கினேன். மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம், நிவாரணப் பணிகள் குறித்தும்விளக்கம் தந்தேன். மற்றபடி இச் சந்திப்புக்கு முக்கியதுவம் ஏதும் இல்லை.
என்னுடன் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்டோரும்இருந்தனர் என்றார் ஜெயலலிதா.
முதல்வர் ஜெயலலிதாவின் விளக்கம் இப்படி இருப்பினும், தமிழக சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்துஜெயலலிதாவிடம் பர்னாலா விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
வீரப்பன் என்களென்டர் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்தும் ஆளுநர் விவரம் கேட்டறிந்ததாக ஆளுநர்மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக ஆளுநரை முதல்வர் சந்தித்தபோதெல்லாம் அமைச்சர்களின் தலை உருட்டப்படுவது வழக்கம் என்பதால், இன்றையசந்திப்பும் கூட அமைச்சர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இது ஆளுநருக்கு விளக்கம் தரும் ஒருசந்திப்புதான் என முதல்வர் தெரிவித்த பிறகே கோட்டையில் அமைதி திரும்பியது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications