செக்ஸ் புகாரை மறுக்கிறார் அதிமுக மா.செயலாளர்
ஊட்டி:
மரபணு சோதனை மூலம் தன்னைக் குற்றமற்றவன் என்று நிரூபிக்கத் தயாராக இருப்பதாக -செக்ஸ் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளநீலகிரி மாவட்ட அதிமுக செயலாளரும், தேயிலை வாரிய கழக தலைவருமான சீனிவாசன் கூறினார்.
சீனிவாசன் தன்னை காரில் வைத்து கட்டாயப்படுத்தி கற்பழித்ததாகவும், திருமணம் செய்ய வற்புறுத்தியபோது தனக்குகொலைமிரட்டல் விடுத்ததுடன் விபசார வழக்கில் கைது செய்ய செய்து சிறையில் தள்ளுவதாக மிரட்டியதாகவும் குன்னூரைச்சேர்ந்த நர்ஸ் மகேஸ்வரி புகார் தெரிவித்தார்.
இந் நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
5 மாதங்களுக்கு முன்பு மகேஸ்வரி தன்னை கிரேக்மோர் எஸ்டேட்டில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்கள் என்றும்,தனக்கு உதவுமாறும் கூறினார். வழக்கறிஞர் என்ற முறையில் நானும் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தேன்.
அதற்கு பிறகு அவள் என்னிடம் தொலைபேசியில், என்னை விரும்புவதாக கூறினாள். நான் ஏற்கனவே திருமணம் ஆனவன்என்பதைக் கூறி மறுத்தேன். ஆனால் அவள் எனக்கு வைப்பாட்டியாக வாழத் தயார் என்று கூறினாள்.
பின்பு தொடர்ந்து இது போல தொந்தரவு கொடுத்ததால், அவளுடைய அண்ணன் ரவிக்குமார், அவரது மனைவி மற்றும்மகேஸ்வரியின் சகோதரிகள், உறவினர்களை அழைத்து எச்சரித்து அனுப்பினேன்.
அதன்பின்பு மகேஸ்வரி, சென்னையில் சினிமாவில் நடிக்கப் போனாள். அப்போது மீண்டும் என்னை தொடர்பு கொண்ட அவள்,அவளது தோழிகளுடன் சேர்ந்து ஆண்களுடன் கூட்டமாக செக்ஸ் அனுபவித்து வருவதாகவும், அவளது தோழிகள் என்னுடனும்உடலுறவு கொள்ள விரும்புவதாகவும் கூறினாள். நான் அவளைத் திட்டிவிட்டு போனை வைத்துவிட்டேன்.
இப்போது என் மீதே கற்பழிப்பு புகார் கூறியிருக்கிறாள். மகேஸ்வரி மீதும், அவளுக்கு உடந்தையாக இருக்கும் என்னுடையஅரசியல் எதிரிகள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்து வருகிறேன்.
மகேஸ்வரி மரபணு பரிசோதனைக்கு தயார் என கூறியிருக்கிறார். நானும் மரபணு சோதனைக்குத் தயார் என்றார் சீனிவாசன்.
அதிமுக மா.செ. மீது பெண் கற்பழிப்பு புகார்
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications