உமா Vs
டெல்லி:
பா.ஜ.கவில் உமா பாரதிக்கும் பிரமோத் மகாஜன் கோஷ்டிக்கும இடையே கடும் மோதல் மூண்டுள்ளது.
சமீபத்தில் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற அத்வானி நிர்வாகிகள் குழுவை மாற்றியமைத்தார். உமா பாரதிக்கு பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்கினார். ஆனால், இக் குழுவில் பிரமோத் மகாஜன் இருந்தால் நான் பதவியேற்க மாட்டேன் எனஉமா கூறிவிட்டார்.
மேலும், தனக்கு மீண்டும் மத்தியப் பிரதேச முதல்வர் பொறுப்பே வேண்டும் என்று போராடிப் பார்த்தார். ஆனால், மகாஜன்,அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கோஷ்டி அமைத்துக கொண்டு உமா பாரதிக்கு முதல்வர் பதவிதருவதை எதிர்த்தனர்.
இதையடுத்து உமா பாரதியுடன் அத்வானி பல நாட்கள் பேசி சமாதானப்படுத்தியதன் விளைவாக நேற்று அவர் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மத்தியப் பிரதேச அரசின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த ஒரு குழு அமைப்பதாகவும்அதில் உமா பாரதிக்கு இடம் தருவதாகவும் அத்வானி உறுதியளித்தையடுத்து இப் பொறுப்பை ஏற்றார்.
ஆனால், அதன் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பிரமோத் மகாஜன் மீதான தனது அதிருப்தி குறித்து அத்வானியுடன் பேசியிருப்பதாகவும், மகாராஷ்டிரம் மற்றும் மக்களவைத்தேர்தலில் பா.ஜ.கவை வழி நடத்திய மகாஜன் தான் கட்சியின் தோல்விக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் கட்சிக்குக் கிடைத்த வெற்றிக்கு நானே காரணம் என்றும் கூறிய உமா பாரதி, முதல்வர் பதவியை மீண்டும்தன்னிடம் வழங்குவதையே மக்கள் விரும்புவதாகக் கூறினார்.
காராஷ்டிர தேர்தலுக்கு முன் உமா பாரதி நடத்திய யாத்திரையில் கட்சியின் முக்கியஸ்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்தார்மகாஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
உமாவின் இந்தப் பேச்சுக்கு கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் பிரமோத் மகாஜனுக்குநெருக்கமானவருமான முக்தார் அப்பாஸ் நக்வி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், மத்தியப் பிரதேசத்தில் கட்சியின் வெற்றிக்காக லட்சக்கணக்கான தொண்டர்களும் தலைவர்களும்பாடுபட்டனர். ஆனால், வெற்றிக்கு நானே பொறுப்பு என்று உமா பாரதி பேசியிருப்பது ஒழுக்கமற்ற பேச்சு. மேலும் பிரமோத்மகாஜனுக்கு எதிராக அவர் செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டி தந்ததும் கட்சியின் ஒழுக்கத்தை மீறிய செயல்.
இது குறித்து கட்சியில் விவாதிப்போம் என்றார்.
மகாராஷ்டிர தேர்தலுக்கு முன் உமா பாரதி நடத்திய யாத்திரையில் கட்சியின் முக்கியஸ்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்தார்மகாஜனும் வெங்கையா நாயுடுவும் தடுத்தது குறிப்பிடத்தக்கது.
பவார் கட்சியில் தாக்கரேயின் மகன்:
இதற்கிடையே தனது தந்தையான சிவசேனேத் தலைவர் பால் தாக்கரேவுடன் மனக் கசப்பு காரணமாக, பிரிந்து வாழும் அவரதுமகன் ஜெய்தேவ் தாக்கரே, சரத் பவாரின் தேசியவாத காங்கிரசில் சேரப் போவதாக அறிவித்துள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications