வரும் 27ம் தேதி தமிழக, கேரள அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
சென்னை:
பரம்பிக்குளம், -ஆழியாறு நதி நீர்ப் பிரச்சினை தொடர்பாக வருகிற 27-ம் தேதி திருவனந்தபுரத்தில் தமிழக, -கேரள அமைச்சர்கள்பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பரம்பிக்குளம் ,-ஆழியாறு பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன்சாண்டியும் சென்னை தலைமைச் செயலகத்தில் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
பின்னர் உம்மன் சாண்டி அளித்த பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இப்பிரச்சினை 1988-லிருந்து உள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் 17 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இருக்கிற தண்ணீரைப்பகிர்ந்து கொள்வதில்தான் பிரச்சினை உள்ளது. விரைவில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைத் தமிழகத்துக்குத் திருப்பி விடுவது குறித்து இக் கூட்டத்தில் பேசவில்லை.
தமிழகத்தின் பிரச்சினைகளை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் கேரளத்தில் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில்தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளது.
இந்தப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையைப் பெற்று, ஒருங்கிணைந்து செயல்பட விரும்புகிறோம். ஏற்கெனவேஎதிர்க்கட்சி தலைவர்களுடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளோம்.
இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இம்மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.
கோவை வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள அப்துல் நாஸர் மதானியைப் பற்றியோ,அவரை விடுதலை செய்வது பற்றியோ ஜெயலலிதாவிடம் பேசவில்லை
சிறைக்குச் சென்று மதானியைச் சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றார் உம்மன் சாண்டி.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் ஜெயலலிதாவுடன் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,நிதியமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலர் லட்சுமி பிரானேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கேரளத்தின் சார்பில் உம்மன் சாண்டியுடன் அந்த மாநில நீர்பாசனத் துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன், தொழில்அமைச்சர் குஞ்ஞாலிக்குட்டி, தலைமைச் செயலாளர் பாபு ஜேகப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications