சுபாஷனுக்கு எதிராக மீண்டும் வக்கீல்கள் போர்க்கொடி!
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு எதிராக தமிழகம் மற்றும் புதுவை மாநில வழக்கறிஞர்கள்போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
சுபாஷன் ரெட்டியை மாற்றக் கோரி சென்னை மற்றும் மதுரை வழக்கறிஞர்கள் சில மாதங்களுக்கு முன்பு தொடர் போராட்டம்நடத்தி வந்தனர். பின்னர் இது தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களின் கூட்டுப் போராட்டமாக மாறியது.
இந் நிலையில், சுபாஷன் ரெட்டியை கேரள மாநில உயர்நீதிமன்றத்திற்குக்கு மாற்றப் போவதாக செய்திகள் வெளியாகின.ஆனால்மாறுதல் உத்தரவு ஏதும் வெளியாகவில்லை.
இந்தப் பின்னணியில், தமிழக, புதுவை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்தக் கூட்டத்தில்,சுபாஷன் ரெட்டியை இடமாற்றம் செய்வதாக அறிவிப்பு வெளியாகி பல நாட்களாகியும் அவர் இன்னும் மாற்றப்படாமல்இருப்பதற்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
சுபாஷன் ரெட்டியை உடனடியாக மாற்றி உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக டிசம்பர் 18ம் தேதி மீண்டும் கூடிப் பேசுவது எனவும், அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துஆலோசிக்கப் போவதாகவும் கூட்டமைப்பின் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications