தமிழகத்தில் தொடர் மழை: நிரம்பி வழியும் அணைகள்
சென்னை:
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமானதையடுத்து 90 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளன.
கடந்த மாதம் 18-ம் தேதி முதல் தமிழகத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும்உள்ள 39,366 ஏரிகளில் 90 சதவீதம் நிரம்பி விட்டன.
10,540 குளங்களில் தற்போது பெய்துள்ள மழையால் 4 ,000க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. 100 ஏக்கருக்குகுறைவான நிலங்களுக்கு பாசன வசதி வழங்கும் 30,000 குளங்கள் கிராம வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில்13,000 குளங்கள் நிரம்பிவிட்டன.
40,000 ஊரணிகள், கோவில் குளங்களில் 25,000க்கும் மேல் நிரம்பி விட்டன.
தொடர் மழை காரணமாக காவிரி டெல்டா பகுதியில் அதிக வெள்ள சேதம் ஏற்பட்டிருக்கிறது. நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சிமாவட்டங்களில் லட்சக்கணக்கான ஹெக்டேர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 1.21 லட்சம் ஹெக்டேரில், 75,000 ஹெக்டேர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிநாசமாகிவிட்டன. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 3.45 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்களில் 2 லட்சம் ஹெக்டேர்நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன.
நாகை மாவட்டத்தில் ரூ. 233 கோடி மதிப்பிலும், தஞ்சை-, திருவாரூர் மாவட்டங்களில் ரூ. 520 கோடி மதிப்பிலும் பயிர்கள்அழிந்துள்ளன.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கடலூரில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அங்கு 30,000 ஹெக்டேர் பரப்பளவில்நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் நெற்பயிற்கள்நாசமாகி விட்டது.
![]() |
தொடர்மழை காரணமாக ஜவுளி ஏற்றுமதி, பட்டாசு, உப்பள தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். சென்னையில்ஆயிரக்கணக்கான குடிசைகளில் மழைநீர் புகுந்துள்ளது. இன்று காலையும் மழை பெய்ததால் புறநகரில் சில பள்ளிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல் விழுப்புரம், புதுவை, காரைக்கால் பகுதி பள்ளிகளுக்கும் இன்று விடுமுறைவிடப்பட்டுள்ளது.
மழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறைக்கப்பட்டுள்ளது. தற்போது விநாடிக்கு 146 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. நீர்வரத்து 9,266 கன அடியாக இருக்கிறது. அணை நீர்மட்டம் 95.82 அடியாகஉயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 31.10 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 59.80அடியாகவும், சிற்றார்-1 அணை நீர்மட்டம் 8.56 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 8.99 அடியாகவும் உயர்ந்து உள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications