ஜெவுக்கு மயில்கள்.. கருணாநிதிக்கு காக்காய்கள்
![]() |
தமிழகத்தில் கடந்த 2000, 01, 02 ஆகிய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட தரமான தமிழ்ப் படங்களுக்கு தலா ரூ. 5 லட்சம்மானியம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திரைத் துறையினர் சார்பில் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு ஜெயலலிதா ஏற்புரை நிகழ்த்துகையில்,
இந்த நிகழ்ச்சி மூலம் என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள். என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சினிமாஎன் தாய்வீடு, நீங்கள் எல்லாம் என் உற்றார் உறவினர்கள். எனக்கு இந்த பிரமாண்டமான விழா எடுத்த உங்களை நான் மறக்கவேமாட்டேன்.
என்னைப் பற்றி நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். என்னால் முடிந்தால் மட்டுமே அது குறித்து வாக்கு கொடுப்பேன். வாக்குறுதிகொடுத்துவிட்டால், உயிரே போனாலும் அதை நிறைவேற்றுவேன்.
திரைத் துறைக்கு பல்வேறு சலுகைகள் கேட்டீர்கள். உடனடியாகக் கொடுத்தேன். இப்போது மேலும் சில அறிவிப்புகளைஉங்களுக்காக வெளியிடுகிறேன். அரசின் நிதிப் பற்றாக்குறை காரணமாக சில ஆண்டுகளாக திரைப் படங்களுக்கு வழங்கப்பட்டுவந்த மானியங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 2000, 2001, 2002 ஆகிய ஆண்டுகளில் தமிழில் தயாரிக்கப்பட்ட தரமான, குறைந்த பட்ஜெட் படங்களுக்கு தலா ரூ. 5லட்சம் மானியம் வழங்கப்படும்.
இதேபோல, பெப்சி திரைப்பட ஊழியர் கூட்டமைப்பின் வீட்டு வசதித் திட்டம் குறித்தும் விரைவில் சந்தோஷச் செய்தியைஅறிவிக்கிறேன். இயக்குநர்கள் சங்கத்திற்கும் விரைவில் தனி இடம் ஒதுக்கித் தரப்படும்.
இந்தியாவில் அதிக படங்களைத் தயாரிக்கும் துறையாக தமிழ்த் திரையுலகம் விளங்குகிறது. எனவே தமிழ்த் திரைத் துறைநெருக்கடியில் சிக்கித் தவிப்பதை அனுமதிக்க முடியாது. அதனால்தான் திருட்டு விசிடி அரக்கனிடமிருந்து திரைத் துறையைக்காப்பாற்றினேன்.
இங்கே ஆடும் மயில்களும், பாடும் குயில்களும் கூடியிருக்கிறீர்கள். எனது கண்களுக்கு நீங்கள் அனைவரும் மயில்களும்,குயில்களுமாக தென்படுகிறீர்கள்.
ஆனால் ஒருவருக்கு ( கருணாநிதியை குறிப்பிட்டார்) மட்டும் காக்காய் கூட்டமாக தென்படுகிறீர்கள். இது காட்சிக் கோளாறாஅல்லது அவரது கண்ணில் ஏற்பட்ட கோளாறா என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications