அதிமுக பிரமுகர் கொலை: பாமக எம்எல்ஏ முன் ஜாமீன்
சென்னை:
கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றபாமக உறுப்பினர் வேல்முருகன் மற்றும் அவரது இரு சகோதரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த முன்னாள் பாமக உறுப்பினரான வெங்கடேசன் என்பவர்அதிமுகவில் சேர்ந்த சில நாட்களில் கொலை செய்யப்பட்டார்.
அவரைக் கொலை செய்ததாக எம்.எல்.ஏ. வேல் முருகன், அவரது சகோதரர்கள் திருமால்வளவன், கண்ணன்ஆகியோர் மீது வெங்கடேசனின் மனைவி சரஸ்வதி குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் வேல்முருகன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட புதிய எஸ்.பி.யாக பதவியேற்ற பிரேம்குமார், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவேல்முருகன் மற்றும் அவரது சகோதரர்களை கைது செய்ய தீவிரமாக முயன்று வந்தார்.
ஆனால், வேல்முருகனும், அவரது சகோதரர்களும் தலைமறைவாகிவிட்டனர். டெல்லியில் இருந்தபடி பேட்டிகள்அளித்து வந்தனர். எஸ்.பி. பிரேம்குமார் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீலைச் சந்தித்தும் வேல்முருகன் புகார் செய்தார்.
இந் நிலையில் வேல்முருகன் மற்றும் சகோதரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுசெய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், 3 பேருக்கும் முன் ஜாமீன் வழங்கினார்.
மூவரும் கோவையில் தங்கியிருந்து அங்குள்ள மாவட்ட செஷன்ஸ் நீதிபதி முன் தினமும் காலையில் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications