ஜெயேந்திரர் கைதுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்!
சென்னை :
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் அதிரடியாக கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன்கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயேந்திரர் இரவில் ஹைதராபாத் அருகே கைது செய்யப்பட்டு, தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டார். இதையடுத்து காஞ்சி மடத்தைச் சேர்ந்தவர்களும், பா.ஜ.க, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஏராளமான அளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்ல் குவிந்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாஜக தேசிய செயலாளர் இல.கணேசனும் அங்கு வந்திருந்தார்.
பாதுகாப்புடன் காஞ்சிக்கு...
விமான நிலையத்தின் வெளியே கொண்டு வரப்பட்ட ஜெயேந்திரரை சந்திக்க யாரையும் போலீசார்அனுமதிக்கவில்லை. நிருபர்களை நோக்கி நடந்து வந்த ஜெயேந்திரரை போலீசார் லாவகமாகத் திருப்பி டாடாசுமோ போலீஸ் வேனில் ஏற்றினர்,
பல போலீஸ் வாகனங்கள் முன்னும், பின்னும் செல்ல டாடா சுமோவிலேயே ஜெயேந்திரர் காஞ்சிபுரம் கொண்டுசெல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து காஞ்சி மடத்தினரும் காரில் சென்றனர்.
ஜெயேந்திரர் கொண்டு செல்லப்பட்ட பின் விமான நிலையத்தில் நிருபர்களிடம் இல.கணேசன் பேசுகையில்,
இல.கணேசன் எதிர்ப்பு:
கொலை வழக்கில் மிகப் பெரிய மடாதிபதியான ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது,வேதனைக்குரியது. பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் என்ற முறையில் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் மடத்தின்சீடன் இந்த இல.கணேசன் என்ற முறையிலும் இந்தக் கைதை கடுமையாக கண்டிக்கிறேன்.
அவரை முதலில் விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அவர் ஒன்றும் தப்பி ஓடக்கூடியவர் அல்லர், விசாரணைக்கு மறுக்கக் கூடியவரும் அல்லர், ஒத்துழைப்பு தர மறுப்பவரும் அல்லர்.
அப்படிப்பட்டவரை விசாரணையே இல்லாமல் நள்ளிரவில் அவசர அவசரமாக போலீஸார் கைது செய்திருப்பதுஏன் என்று புரியவில்லை என்றார்.
ஆர்.எஸ்.எஸ்., விஎச்பியினர் கூறுகையில், முஸ்லீம்களுக்கு ஆதரவாக செயல்பட்டு இந்தக் கைதை நடத்தியுள்ளதுதமிழக அரசு. இது மாபெரும் மனித உரிமை மீறல், தீபாவளி தினத்தின் இரவில் இந்தக் காரியத்தைசெய்துள்ளார்கள் என்றனர்.
செயற்கை சிரிப்பு:
கைது செய்யப்பட்ட ஜெயேந்திரரின் முகத்தில் வழக்கமாகக் காணப்படும் சிரிப்க்ை காண முடியவில்லை.
வலுக்கட்டாயமாக வரவழைத்த சிரிப்புடன் காணப்பட்ட அவர், முகத்தில் கோபம் மற்றும் அதிர்ச்சியின் ரேகைகள்எட்டிப் பார்த்தன.
இது போன்ற ஒரு போலீஸ் நடவடிக்கையை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவரது முகத்தைப் பார்த்தால்அப்பட்டமாக தெரிந்தது.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications