மீனவர்: மன்மோகனுக்கு ஜெ. கடிதம்
சென்னை:
இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கைஎடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:
சர்வதேச எல்லையைக் கடந்ததாக கூறி தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்படுவது குறித்து பலமுறை தங்களுடைய கவனத்திறக்கு கொண்டு வந்துள்ளேன்.
இந் நிலையில் கடந்த 9ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் 12 ராமேஸ்வரம் மீனவர்களை, அவர்களது 3படகுகளுடன் இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
அவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
கச்சத்தீவை சுற்றிலும் மீன் பிடிப்பதற்கு தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது. அந்த உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்தப்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சட்டவிரோதமாக இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று வருகிறார்கள்.
இது தமிழக மீனவர்களிடையே மிகுந்த கவலையையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே கடத்திச் செல்லப்பட்டுள்ளமீனவர்களை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயலலிதா.
இதேபோல, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங்குக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications