பிரேம்சுக்கு 3 ஆண்டு சிறை உறுதி!
மதுரை:
வெளிநாட்டுப் பணத்தை வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருச்சி செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுசிறைத் தண்டனையை உறுதி செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி அருகே ஆசிரமம் வைத்து நடத்தியவர் பிரேமானந்தா. இலங்கையைச் சேர்ந்த இவரது ஆசிரமத்தில் பெண்கள் பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், இதைத் தட்டிக் கேட்ட ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும் கடந்த 1994 ம்ஆ ண்டு பெரும் பரபரப்புஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரேமானந்தா கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகளில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது சிறை வாசம் அனுபவித்து வருகிறார் பிரேமானந்தா.
இந் நிலையில், பிரேமானந்தாவின் ஆசிரமத்தில் வெளிநாட்டுப் பணம் இருந்ததை 1994ம் ஆண்டு நடந்த சோதனையின்போது வருமானவரித்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து பிரேமானந்தா மீது கணக்கில் காட்டாமல் வெளிநாட்டுப் பணத்தை வைத்திருந்ததாக கூறிவழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பிரேமானந்தாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. திருச்சி மாவட்டசெஷன்ஸ் நீதிமன்றமம் இதை உறுதி செய்தது.
இதை எதிர்த்து பிரேமானந்தா தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலனை செய்தமதுரை உயர்நீதிமன்றக் கிளை, பிரேமானந்தாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications