சர்ச்சையில் சிக்கிய சாமியார்கள் !
சென்னை:
2000 ஆண்டு கால பழமை வாய்ந்த காஞ்சி சங்கர மடம் இன்று சர்ச்சையில் சிக்கியதைப் போல, ஏற்கனவே இரண்டு தமிழக மடங்கள்சர்ச்சையில் சிக்கியுள்ளன.
பாரம்பரியமும் நெடிய வரலாற்றும் கொண்டது காஞ்சி சங்கர மடம். அந்தப் பெருமையை முந்தைய தலைமை மடாதிபதியும், பெரியவர்என்றும் அனைத்துத் தரப்பினராலும் அன்புடன் அழைக்கப்பட்டவருமான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கட்டிக் காத்தார்.
ஆனால், அந்த நல்ல பெயரை ஜெயேந்திரர் கெடுத்து விட்டதாக பொது மக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.
காஞ்சிப் பெரியவர் எந்தளவுக்கு மக்கள் மத்தியில் புகழ் பெற்றவராக இருந்தாரோ அதை விட பல மடங்கு மக்களின் அதிருப்தியையேஜெயேந்திரர் சம்பாதித்துள்ளது கண்கூடு.
தருமாபுரம் மட மோதல்:
காஞ்சி மடம் போலவே சமீபகாலத்தில் ஏற்கனவே இரண்டு புகழ் பெற்ற மடங்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளன.
புகழ் பெற்ற தருமபுரம் ஆதீன மூத்த மடாதிபதியை விஷம் வைத்துக் கொல்ல முயன்றதாக இளைய ஆதீனம் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்த இளைய மடாதிபதி சென்னையில் நடிகைகளுடன் கூட சல்லாபத்தில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது.
மதுரை ஆதீன மோதல்:
இதைப் போலவே, மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்ட சுவாமிநாதன் என்பவரை சில மாதங்களிலேயே அந்தப்பொறுப்பிலிருந்து மூத்த ஆதீனம் நீக்கினார்.
தனக்கு சுவாமிநாதன் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் மதுரை ஆதீனம் பரபரப்பான புகாரைக் கூறினார். இதை மறுத்த சுவாமிநாதன்,தனக்குப் பதிலாக குட்டிச் சாமியாரை இளைய மடாதிபதியாக்க ஆதீனம் முயல்வதாக குற்றம் சாட்டினார்.
குட்டிச் சாமியும் காஞ்சி மடமும்:
ஆனால், குட்டிச் சாமியாரை மதுரை ஆதினத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பிரித்த காஞ்சி சங்கராச்சாரியார் அவரை மதுரை மடத்திடம்இருந்து ஒதுங்கியிருக்கச் செய்தார். காஞ்சி மட வழக்கப்படி புதிய பெயர் சூட்டினார் சங்கராச்சாரியார்.
இதையடுத்து பிராமணரான குட்டிச் சாமியார் மதுரை மடத்தில் சேரவே முடியாது என்று அறிவித்தார் மதுரை ஆதினம்.
சர்ச்சைக்குப் பெயர் போன ஜெயேந்திரர்!
காஞ்சி சங்கராச்சாரியார் சர்ச்சையில் சிக்குவது இது புதிதல்ல. இதற்கு முன்பும் பல முறை அவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
காஞ்சி மகா பெரியவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மடாதிபதியாக இருந்தபோது அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு, மடத்தை விட்டேவெளியேறினார் ஜெயேந்திரர்.
துறவறத்தை கைவிட்டு விட்டதாகவும் அவர் அறிவித்தார். பின்னர் அவரை போலீஸார் தேடிப் பிடித்து மடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.
அயோத்தி விவகாரத்தில்:
அதன் பின்னர் அயோத்திப் பிரச்சினையில் பா.ஜ.க. தலைவர்களின் கோரிக்கையை ஏற்று தலையிட்டார் ஜெயேந்திரர். பிரச்சினையைத் தீர்க்க முயல்வதாக கூறிமுஸ்லீம் தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். ஆனால் அது பெரும் தோல்வியில்தான் முடிந்தது.
தலித்கள் விவகாரம்:
மடத்திற்கு சொந்தமான காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூர் என்ற இடத்தில் உள்ள நகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர்கள் மோசமாகநடத்தப்படுவதாகவும், அவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. ஆனால் இதை ஜெயேந்திரர் மறுத்தார்.
மொத்தத்தில் துறவியாக மட்டும் அவர் இருந்ததில்லை. அரசியலும் அவரது துறையாக இருந்து வந்தது. அரசியல் சாயம் பூசிக் கொண்ட சாமியாராகவேதன்னை அவர் வெளிப்படுத்தினார். இப்போது கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலைச் சதி (120-பி பிரிவு), கொலை (302வது பிரிவு) உள்பட 15 பிரிவுகளின் கீழ் சங்கராச்சாரியார் மீது இப்போதுவழக்குப் போட்டுள்ளது போலீஸ்.
எஸ்.பியின் அதிரடி:
சங்கராச்சாரியாரைப் பிடிப்பதற்கு முன் இக் கொலையில் தொடர்புடைய 14பேரை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. பிரேம்குமார் சுற்றி வளைத்துவிட்டதுகுறிப்பிடத்தது. அவர்களிடம் மிகத் தெளிவான வாக்குமூலம் வாங்கிவிட்டுத் தான் சங்கராச்சாரியாரைக் கைது செய்துள்ளார்.
கைதான கும்பல் கூலிக்கு கொலை செய்யும் சென்னையைச் சேர்ந்த ரெளடிகள் தான் என்கிறார் பிரேம்குமார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications