ஹைதராபாத்தில் பிரேம்ஸ்-2விடம் விசாரணை
சென்னை:
திருச்சியைச் சேர்ந்த போலி சாமியார் பிரசன்ன வெங்கடேச சதுர்வேத சுவாமியை விசாரணைக்காக போலீஸார்ஹைதராபாத் கொண்டு சென்றுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த போலி சாமியார் பிரசன்ன வேங்கடேச சதுர்வேத சுவாமி, சென்னை தொழிலதிபர் சுரேஷின்மனைவி, மகளைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத்சென்று சென்னை போலீஸார் சதுர்வேதியை கைது செய்து கொண்டு வந்தனர்.
சுரேஷின் மனைவி மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். இதை சதுர்வேத சுவாமி சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
கடவுள் பக்தியை வைத்து அவரை தனது இச்சைக்குப் பயன்படுத்தியுள்ளார். நான் கடவுள், நான் எது செய்தாலும் அது கடவுளின்கட்டளைப்படிதான் நடக்கும் என்று கூறி சுரேஷின் மனைவியை பாழ்படுத்தியுள்ளார். மேலும், உனது கணவருடன் நீ சேரக் கூடாது. அப்படிசேர்ந்தால் அழிந்து விடுவாய் என்றும் கூறி மூளைச் சலவை செய்துள்ளார்.
சதுர்வேத சுவாமியின் புத்தியைப் புரிந்து கொண்ட சுரேஷின் மனைவி அவரிடமிருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால் அவரை பாலியல்ரீதியாக தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அவரது வீட்டில் இருந்த பல விலை உயர்ந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளார்.
வெறும் தாள்களில் சுரேஷின் மனைவியிடம் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டு அதை வைத்து அவரை மிரட்டியுள்ளார். சுரேஷின்மனைவி, மகளை வீட்டிற்குள் வைத்துப் பூட்டிக் கொடுமைப்படுத்தியுள்ளார். பின்னர்தான் ஹைதராபாத் கடத்திச் சென்றுள்ளார்.
தற்போது போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள சதுர்வேதியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந் நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் சோதனையிடுவதற்காக சதுர்வேதியை போலீஸார்இன்று ஹைதராபாத் கொண்டு சென்றனர்.
சதுர்வேதியின் சென்னை ஆசிரம அலுவலகத்திலிருந்து பல முக்கிய ஆவணங்களை போலீஸார் பறிமுதல்செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் சதுர்வேதி சாமியார் தன்னை ஏமாற்றியதாக மேலும் ஒரு பெண் பிரமுகர் மத்திய குற்றப் பிரிவுபோலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் யார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.அவரது புகார் குறித்து போலீஸார் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
பல கோடி சொத்து:
இதற்கிடையே, சதுர்வேத சுவாமிக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது தெரியவந்துள்ளது. அவரது பெயரில்உள்ள வங்கி லாக்கர்களில் ஏராளமான நகைகள், பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பல தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை மோசடி செய்து பல கோடி பணத்தை சதுர்வேத சுவாமி சுருட்டியுள்ளார்.இவர்களில் சிலரின் மனைவிகளையும் தனது பக்கம் வளைத்து அவர்களிடம் செக்ஸ் உறவும் வைத்துள்ளார்.
இதுகுறித்து தொழிலதிபர்கள் வட்டாரத்தில் சலசலப்பு எழவே தனது கோவை தொடர்புகளைக் குறைத்துக் கொண்டுள்ளார் சுவாமி. இந்நிலையில்தான் சுரேஷின் மனைவியை வைத்து ஏராளமான பணம் பறித்துள்ளார், அவரது குடும்பத்தையும் சீரழித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications