ஹே ஹை.. குதிரைக்கு மாறும் மக்கள்!
சென்னை:
பெட்ரோல் விலை உயர்வையடுத்து சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பலரும் பாரம்பரியமான குதிரை மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்களுக்குமாறி வருகின்றனர்.
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் படு பயங்கரமாக ஏறி வருகிறது. இதனால் ஆட்டோக்காரர்கள் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்திவருகின்றனர். இதனால் சாதாரண மக்கள் ஆட்டோக்களை பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோல கடனை உடனை வாங்கி, கஷ்டப்பட்டு இரு சக்கர மோட்டார் சைக்கிள் வாங்கி வைத்து ஓட்டி வருபவர்கள் மிகவும் சிக்கலானநிலையில் உள்ளார்கள். பெட்ரோல் போட்டு மாள முடியாமல் அவர்கள் சைக்கிள்கள் அல்லது அரசு பேருந்துகளுக்கு மாறி வருகிறார்கள்.
இந் நிலையில் சென்னைப் புறநகர்ப் பகுதிகளான மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநில்லூர் ஆகிய இடங்களில் மீண்டும் குதிரைவண்டிகளுக்கு மவுசு கூடியுள்ளது.
இப் பகுதிகளில் ஜட்கா எனப்படும் குதிரை வண்டிகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. ஆனால், அதில் ஏறுவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்ததால் வண்டிகளின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது.
தற்போது பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில உயர்ந்து வருவதால் குதிரை வண்டிகளுக்கு கூட்டம் அதிகரித்துள்ளது.
6,7 பேர் கூட அதிகபட்சம் 15 ரூபாய் செலவில் இதில் பயணிக்க முடிகிறது.
ஆதம்பாக்கம் பகுதியில் மொத்தம் 2 குதிரை ஸ்டாண்டுகள் உள்ளன. இந்த ஸ்டாண்டுகளில் மொத்தமாக 10 குதிரை வண்டிகள் உள்ளன. 10வண்டிகளும் இப்போது பிசியாக உள்ளன. முன்பெல்லாம் மாலைக்கு மேல்தான் இந்த வண்டிகள் படு பிசியாக இருக்கும். இப்போதோ,காலை முதலே பிசியாக உள்ளன.
பெட்ரோல் விலை தொடர்ந்து நீடித்தால் சென்னை முழுவதுமே குதிரை வண்டிகள் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications