கைது செய்த தமிழக கமாண்டோ படை மீது புகார்!
சென்னை:
ஜெயேந்திரரை கைது செய்ய விமானத்தில் ஆயுதங்களை எடுத்துச் சென்ற தமிழக போலீஸ் கமாண்டோ படை மீது இந்திய விமானஆணையமும் மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படையினரும் புகார் கூறியுள்ளனர்.
விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரைக் கைது செய்ய போலீஸ் தனிப் படையினர் தமிழக அரசுக்குச் சொந்தமான செஸ்னா ரக விமானத்தில்சென்றனர். ஹைதராபாத்திலிருந்து ஜெயேந்திரரை அதே விமானத்தில் சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
இந்த விஷயத்தில் புதிய சர்ச்சை எழுப்பட்டுள்ளது. செஸ்னா விமானத்தில் துப்பாக்கிகள் போன்றவற்றை தமிழக போலீஸார் எடுத்துச்சென்றது சட்டவிரோதமான செயல் என விமான ஆணையம், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன.
விமான நிலைய பாதுகாப்பை கவனிப்பது இந்தப் படை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் போக்குவரத்துக்கான இயக்குனரின் முன் அனுமதியைப் பெறாமல் இதுபோல ஆயுதங்கங்களை எடுத்துச் சென்றது சட்டப்படிகுற்றமாகும் என்று இரண்டு அமைப்புகளும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் புகார் தெரிவித்துள்ளன.
இது குறித்து காவல்துறை உயர் வட்டாரங்களில் விசாரித்தபோது, நாங்கள் சட்டவிரோத செயல் எதிலும் ஈடுபடவில்லை என்று கூறியபோலீசார், விமானத்துறையிலும் தொழில்துறை பாதுகாப்புப் படையிலும் அதிகாரம் கொண்ட பதவிகளில் உள்ள சங்கராச்சாரியாரின்சீடர்களான அதிகாரிகள் தான் தேவையில்லாமல் இந்த விவகாரத்தை கிளப்புகின்றனர் என்றனர்.
முன்னதாக இந்த கமாண்டோ படையினர் ஹைதராபாத்தில் வைத்து சங்கராச்சாரியாரைக் கைது செய்ய முயன்றபோது அவர் உடன் வரமறுத்துள்ளார். நான் காஞ்சிபுரம் வந்த பிறகு வந்து என்னைப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால், உடனே உங்களிடம் விசாரிக்க வேண்டும். உங்களை தனி விமானத்தில் அழைத்துச் செல்கிறோம் என்று நெடுநேரம் பேசியபின்னரே உடன் வர சம்மதித்துள்ளார். இந்தக் கைது நடவடிக்கையின்போது இளையவரான விஜயேந்திரர் அங்கிருந்தார். அவர்முன்னிலையிலேயே இக் கைது நடந்தது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications