சங்கராச்சாரியாரின் கிராமத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை &மதுரை:

ஜெயேந்திரன் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி கிராமம் பெரும் சோகத்திலும், அமைதியிலும் ஆழ்ந்துள்ளது.

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள இருள்நீக்கி என்ற கிராமம்ஆகும். ஜெயேந்திரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தகவல் இந்த ஊர் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கிராமத்தில் பெரும்பாலானோர் ஜெயேந்திரர் மீது அதிக பாசமும், பக்தியும் கொண்டவர்கள் என்பதால் அவரது கைது இந்தமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யாரோ சிலரை திருப்திப்படுத்துவதற்காக ஜெயேந்திரர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கூறுகிறார்கள். இருள்நீக்கிகிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை ஆதீனம் கருத்து:

சங்கராச்சாரியாரின் கைது குறித்து மதுரை ஆதீனம் கூறுகையில்,

இந்தக் கைது அதிர்ச்சி தருகிறது. இந்த நெருக்கடி விரைவில் தீர்ந்து மடாலயத்தில் வழக்கமான பூஜைகள் தொடர வேண்டும்.மதுரை ஆதீனத்துக்குப் பின்னர் தோன்றியதாக இருந்தாலும் காஞ்சி மடம் பாரம்பரியம் வாய்ந்தது.

சங்கராச்சாரியார் மீதான விசாரணை எவ்வித காழ்ப்புணர்ச்சியும் உள்நோக்கமும் இன்றி நடக்க வேண்டும். அவரைஅச்சுறுத்துவதோ, அலைகழிப்பதோ கூடாது என்றார்.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன், இந்தக் கைதை வரவேற்றுள்ளதோடு, கைது செய்தபோலீசாரையும் பாராட்டியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+