காங்கிரசில் இணைகிறார் ப.சிதம்பரம்
சென்னை:
காங்கிரஸ் கட்சியுடன் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை வருகிற 25ம் தேதி இணையவுள்ளதாககூறப்படுகிறது.
அதிமுகவுடன், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்ததை எதிர்த்து கட்சியிலிருந்துவெளியேறியவர் ப.சிதம்பரம். பின்னர் கட்சி சார்பற்ற அமைப்பை ஆரம்பித்த அவர் அதை பின்னர் காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை என்ற பெயரில் கட்சியாக மாற்றினார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து திமுக சின்னத்தின் கீழ் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைபோட்டியிட்டது. அக் கட்சி சார்பில் புரசை ரங்கநாதன், வள்ளல்பெருமான் ஆகியோர் எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியுடன், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை இணைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டது. இருப்பினும் கட்சியை இணைக்க மாட்டேன், காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவேன் என்று கூறினார்ப.சிதம்பரம்.
இந் நிலையில் மக்களவைத் தேர்தலில் அவர் காங்கிரஸ் சின்னத்தின் கீழ் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இதன் மூலம் அவர் விரைவில் காங்கிரஸில் இணைவார் என்று கூறப்பட்டது.
தற்போது இணைப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது. வருகிற 25ம் தேதி டெல்லியில் வைத்து சோனியாகாந்தி முன்னிலையில் ப.சிதம்பரம் காங்கிரஸில் தனது கட்சியை இணைக்கவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. வருகிற மக்களவைகுளிர்காலக் கூட்டத்தொடரின்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவே மக்களவைக்கு ப.சிதம்பரம் வருவார் என்றும்அக்கட்சியினர் உறுதியாக கூறுகிறார்கள்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications