ஜெயேந்திரருக்கு சலுகை: அனைவருக்கும் கிடைக்குமா?
சென்னை:
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம், விடுமுறை நாளில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வரலாறு படைத்துள்ளது. இந்த உரிமை, சாதாரண குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று சிவில்உரிமைகளுக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் விடுமுறை நாட்களாகும். ஆனால் ஜெயேந்திரர்தாக்கல் செய்த மனு மீது விடுமுறை நாளான சனிக்கிழமையும் விசாரணை நடத்தப்பட்டது. உயர் நீதிமன்ற வரலாற்றில் இதுபோலவிடுமுறை நாளில் விசாரணை நடத்தப்படுவது இதுவே முதல் முறை.
இதுகுறித்து சிவில் உரிமைகளுக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய கவுன்சில் உறுப்பினர் சுதா ராமலிங்கம் கூறுகையில்,ஜெயேந்திரர் ஜாமீன் மனுவை சனிக்கிழமை விசாரித்து புதிய வரலாறு படைத்துள்ளது உயர் நீதிமன்றம்.
இந்த சலுகை, உரிமை, சாதாரண குடிமக்களுக்கும் இனிமேல் கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால், சட்டம் அனைவருக்கும்சமம் என்ற வார்த்தையில் அர்த்தம் இல்லாமல் போய் விடும், பலசாலியாக இருந்தால் மட்டுமே உரிமைகள், சலுகைகள்கிடைக்கும் என்று அர்த்தமாகி விடும்.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொதுவாக எந்த இடத்தில் வைத்து விசாரிக்கப்படுவார்களோ அதேபோலவேஜெயேந்திரர் விஷயத்திலும் நடக்க வேண்டும். அவருக்கென சிறப்பு சலுகைகள் காட்டக் கூடாது என்று கூறினார் அவர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications