வெள்ள சேதம்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை:
தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.411.73 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-வர்ஜெயலலிதா கடிதம் எழுதி இருக்கிறார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில பெய்த பலத்த மழை காரணமாக திருவாருர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர்,விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக இயற்கை சீற்ற நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி வழங்கப்பட்டது. வெள்ளசேதங்களை மதிப்பீடு செய்ய அதிகாரிகளை கொண்ட 2 குழுக்களும் அமைக்கப்பட்டன.
பலத்த மழை காரணமாக 30 முதல் 45 நாள் நாற்றுக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளர்.ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். ஏரிகள் உடைந்து முக்கிய சாலைகளும் சேதம் அடைந்துள்ளன.
இப்பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரழிவு நிவாரணநிதியில் இருந்து போதிய அளவு ஒதுக்கீடுசெய்யப்படவில்லையென்றால், நிலைமையை சமாளிப்பது மிகவும் கடினமாகிவிடும்.
வெள்ளச்சேத பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட 2 குழுவினர் தாக்கல் செய்த அறிக்கை இந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டது. வெள்ளநிவாரண உதவிக்கு ரூ.411.73 கோடி தேவைப்படுகிறது.
வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய குழுவை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும்படியும், நிவாரணபணிகளைமேற்கொள்ள தேசிய பேரழிவு நிவாரண நிதியில் இருந்து போதிய தொகை வழங்க சிபாரிசு செய்யும்படியும் தங்களைகேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
காசிமேடு கடலில் சட்டென பார்த்தால்.. தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்த உருவம்.. ஸ்டன் ஆன சென்னை -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications