காஞ்சி சங்கர மடத்தில் போலீஸ் அதிரடி சோதனை
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கர மடத்தில் இன்று காலை முதல் 11 பேர் கொண்ட போலீஸ் குழு சோதனை செய்து வருகின்றது.
காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு எதிரான ஆதாரங்கள், கொலைச்சதிக்குக் காரணமானவர்கள், கொலையை நடத்திய குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
ஜெயேந்திரர் தொடங்கிய ஜன கல்யாண் அமைப்பின் மாவட்ட செயலாளராக பசுபதி என்பவர் இருந்து வந்தார். இவரது வீடு காஞ்சிபுரம் நெல்லுக்காரத்தெருவில் உள்ளது. இந்த வீட்டிற்கு போலீஸ் படை விரைந்தது.
அப்போது வீட்டில் பசுபதி இல்லை, அவர் ஜெயேந்திரரை சந்திக்க வேலூர் சென்றிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து பசுபதிகுடும்பத்தினரைத் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்காத போலீஸார் கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டு சோதனை நடத்தினர்.
சில ஆவணங்களை போலீஸார் அப்போது சேகரித்தனர். சுமார் ஒரு மணி நேர சோதனைக்குப் பின்னர் போலீஸார் அங்கிருந்து சென்றனர். இந்த சோதனையால்நெல்லுக்காரத் தெருவில் ஏராளமானோர் கூடி விட்டனர்.
இந் நிலையில் காஞ்சி சங்கரமடத்திலும் போலீஸார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். சங்கரமடத்தில் பொறுப்பில் இருக்கும் விஸ்வநாதன் என்பவரைபோலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்..
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications