கொலைக்கு ரூ.30 லட்சம் கொடுத்த 2 தொழிலதிபர்கள்
சென்னை:
சங்கரராமனைக் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு ரூ. 30 லட்சம் பணம் சென்னையைச் சேர்ந்த 2 தொழிலதிபர்கள் மூலம்கொடுக்கப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுவேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இக் கொலையைச் செய்ய சென்னையைச் சேர்ந்த அப்பு தலைமையிலான கூலிப்படைக்கு ரூ.40 லட்சம் கொடுக்கப்பட்டிருப்பதுபோலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காஞ்சி மடத்தின் சார்பில் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் கூலிப்படையினருக்கு கொடுக்கப்பட்டது. மீதி 30 லட்சத்தைசென்னையைச் சேர்ந்த 2 பிரபல தொழில் அதிபர்கள் தலா ரூ.15 லட்சம் வீதம் கொடுத்திருக்கிறார்கள்.
கூலிப்படையினரை போலீஸ் விசேஷ கவனிப்பில் விசாரித்ததில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. கொலைக்காகத்தான் பணம்கொடுக்கிறோம் என்பது அந்த தொழிலதிபர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்படுகிறது.
போயஸ் தோட்டத்திற்கும் சங்கர மடத்திற்கும் லடாய்:
இதற்கிடையே போய்ஸ் தோட்டத்திற்கும் சங்கர மடத்திற்கும் இடையேயான பிணக்கு காரணமாக ஜெயேந்திரர் மீது இந்த கைதுநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.
கடந்த காலத்தில் தமிழக கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஜெயேந்திரர் தேதி குறித்துக் கொடுத்தார். அப்போதுமுதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆகாத நாட்களில் கும்பாபிஷேகம் நடத்துமாறு தேதி குறிக்கப்பட்டது. இதை ஜெயலலிதாவிடம்கேரள ஜோதிடர் பணிக்கர் சுட்டிக்காட்டியிருக்கிறாராம்.
அதேபோல் பழனியில் முருகன் சிலைக்கு முன்பாக பஞ்சலோக சிலை வைக்கச் சொன்னதும் ஜெயேந்திரர்தானாம். ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களுக்குப் பிரச்சினையை உண்டாக்கும் இந்த யோசனைக்கு பணிக்கர் கடும் கண்டனம் தெரிவித்தாராம்.
இதனால் ஜெயேந்திரர் மீது ஜெயலலிதா கடுப்பில் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் இந்தக் கொலை வழக்கு வரவே, அதில்ஜெயேந்திரரைக் கைது செய்ய மேலிடம் முழு சம்மதம் தெரிவித்திருக்கிறதாம்.
இது மட்டுமல்லாமல் காஞ்சி மடத்தின் சொத்துக்களை கையகப்படுத்தும் முயற்சியும் நடப்பதாக மடத்திற்கு நெருக்கமான சிலர்தகவல் தருகின்றனர்.
கடந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் காஞ்சி மடத்தின் உள்ளே இருக்கும் பெரியவர் சமாதியையும், பிருந்தாவன்தோட்டத்தையும் அரசு கையகப்படுத்தும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து காஞ்சி மட சொத்துக்கள்அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications
