ஜெயேந்திரருடன் ஜார்ஜ் பெர்ணான்டஸ் நாளை சந்திப்பு
டெல்லி & சென்னை
காஞ்சி சங்கராச்சாரியாரை முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்ணான்டஸ், முரளி மனோகர் ஜோஷி மற்றும் பாஜக தேசியசெயலாளர் இல. கணேசன் ஆகியோர் நாளை வேலூர் சிறைச்சாலையில் சந்திக்கிறார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லத்தில் நடைபெற்றது.
அப்போது அயோத்தி பிரச்சினைக்கு நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண்பது என்றும், கொலை வழக்கில் கைதாகி உள்ளஜெயேந்திரரை பார்க்க நாளை ஜார்ஜ் பெர்ணான்டஸ் செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
ஜோஷியும் சந்திக்கிறார்:
இதற்கிடையே முரளி மனோகர் ஜோஷியும் நாளை ஜெயேந்திரரை வேலூர் சிறையில் சந்திக்கிறார். இதற்காக நேற்றிரவு சென்னைவந்த ஜோஷி, ஜெயேந்திரரைச் சந்திக்க அனுமதி கோரியிருந்தார்.
ஆனால் ரம்ஜான் விடுமுறை என்பதால் அவருக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. நாளை அவர் ஜெயேந்திரரைசந்திக்கலாம் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மக்களவை உறுப்பினர் என்ற முறையில் ஜெயேந்திரரை இன்றே சந்திக்க தமிழக அரசு அனுமதிக்கும் என்று தான் கருதியாக ஜோஷிகுறிப்பிட்டார்.
நாளை ஜெயேந்திரரைக் காண இல. கணேசனும் ஜோஷியுடன் உடன் செல்கிறார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications