விஜயேந்திரரின் தம்பி ரகு விரைவில் கைது?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் இளைய சாமியார் விஜயேந்திரரின் தம்பி ரகுவை போலீஸார் தங்களது விசாரணை வட்டத்திற்குள்கொண்டு வந்துள்ளதாகவும், எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சங்கரராமனைக் கொலை செய்த அப்பு கோஷ்டிக்குப் பணப் பட்டுவாடா விஜயேந்திரர் தம்பி ரகு என்பவர் மூலம்தான்நடந்துள்ளது. கொலையாளிகளுக்கும், ஜெயேந்திரருக்கும் இடையே அவர் பாலமாக செயல்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ரகுவை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரிடம்தற்போது ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தெரிகிறது. எந்த நேரத்திலும் அவர் கைதுசெய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Carரகு கைது செய்யப்பட்டால் கொலை குறித்த மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

கார் பறிமுதல்:

இந் நிலையில், கொலையாளிகள் பயன்படுத்திய குவாலிஸ் கார் (சென்னையில் பதிவு செய்யப்பட்டது), 3 மோட்டார் சைக்கிள்கள்ஆகியவற்றை விஷ்ணுகாஞ்சி போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வாகனங்கள் அனைத்தும் மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+