திருப்தி அளித்த பருவ மழை
சென்னை:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளை விட தற்போது வட கிழக்குப் பருவ மழை கூடுதலாகவே பெய்து வருவதாக வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் வட கிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளை விடஇந்த ஆண்டு தீவிர மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருவதால், ஏரிகள், குளங்கள்,கண்மாய்கள், அணைக்கட்டுகள் நிரம்பி வருகின்றன.
கன மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டாலும் கூட மக்கள் மனதில் மகிழ்ச்சி நிரம்பியுள்ளது.தமிழகத்திலேயே கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரையிலான கால கட்டத்தில் அதிகபட்சமாத திருவாரூர்மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது.
இந்த மாவட்டத்தில் 132 சதவீத கூடுதல் மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த இடம் கடலூர் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.அங்கு 130 சதவீத கூடுதல் மழை பெய்துள்ளது. நாகை மாவட்டத்தில் 120 சதவீத கூடுதல் மழை பதிவாகியுள்ளது.
மொத்தம் 18 மாவட்டங்களில் கூடுதல் மழையும், 11 மாவட்டங்களில் வழக்கமாக கிடைக்கும் மழையும் பெய்துள்ளது.சென்னையில் 26 சதவீத கூடுதல் மழை மட்டுமே பதிவாகியுள்ளது.
மீண்டும் புயல் சின்னம்:
இந் நிலையில், வங்கக் கடலில் மீண்டும் புயல் சின்னம் உருவாகியிருப்பதாக சென்னை வானொலி ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,
தென்மேற்குக் கடலில் மையம் கொண்டிருந்த புயல் சின்னம் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம்மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அனைத்து இடங்களிலும் மழை பெய்யும். பலத்த மழை பெய்யவும் வாய்ப்புஉள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications