ஜெ தவிர அனைவரையும் தாக்கும் பாஜக, விஎச்பி !
சென்னை:
சங்கராச்சாரியார் கைது விஷயத்தில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி, சிவசேனை, பஜ்ரங் தள் ஆகியவற்றின் தலைவர்கள்இதுவரை தப்பித் தவறி கூட அதிமுக மற்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக எந்தக் கருத்தையும் சொல்லி விடாமல் படுஜாக்கிரதை காட்டி வருகின்றனர்.
ஜெயலலிதாவைத் தாக்கினால், தமிழகத்தில் தங்களுடன் கைகோர்க்க பெரிய கட்சி என்று எதுவும் இல்லாமல் போய்விடும் என்றஅச்சம் காரணமாக மத்திய அரசையும், கம்யூனிஸ்ட்டுகளையும், திமுகவையும் தாக்கிக் கொண்டுள்ளன இந்த அமைப்புகள்.
கைது விஷயத்தில் அதிமுக மீதான அதிருப்தியை காட்டவும் முடியாமல், காட்டாமல் இருக்கவும் முடியாமல் இவர்கள் படும்பாடுரொம்பவே சிரமமானது.
திமுகவுக்கு ராஜா கேள்வி:
நேற்று வி.எச்.பி. தலைவர் பிரவீண் தொகாடியா தலைமையில் நடந்த போராட்டத்தில் பா.ஜ.க எம்எல்ஏ ராஜா பேசியதை இதற்குநல்ல உதாரணமாகச் சொல்லலாம்.
ராஜா பேசுகையில், ஆழமான அரசியல் சதி காரணமாக சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கட்டான சூழ்நிலைக்குஇந்து சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது.
தா.கிருட்டிணன் கொலையை எதிர்த்து போராடாத திமுகவுக்கு சங்கரராமன் கொலையை எதிர்த்து போராட ஏன் உணர்வு வந்தது?என்ற நியாயமான கேள்வியை எழுப்பினாார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்து சமுதாயத்தின் ஆணி வேரை அசைத்துப் பார்க்கின்றன திராவிட இயக்கங்கள் என்றதோடு நிறுத்திக்கொண்டார். அதிமுக அரசையோ, முதல்வர் ஜெயலலிதாவையோ தப்பித் தவறி கூட விமர்சித்துவிடவில்லை.
தொகாடியாவின் மானாங்கன்னி தாக்குதல்:
தொகாடியா பேசுகையில், சங்கர மடத்தின் கை வைத்து அதிமுக அரசு குற்றம் செய்துள்ளது என்று ஒரு வரி மட்டும் சொல்லிவிட்டு மீதி நேரம் முழுவதும்முஸ்லீம்களையும் போப் ஆண்டவரையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சோனியா காந்தியையும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தாக்கிக் கொண்டிருந்தார்.
கிட்ட போய்விட்டு....
இந்து முன்னணி தலைவர் ராமகோபலன் பேசுகையில், கஞ்சா வழக்கில் செரீனாவைக் கைது செய்தபோது அதை நீதிபதி கண்டித்தார். அதைப் போலவேசங்கராச்சாரியாரும் புடம் போட்ட தங்கமாக வெளியே வருவார் என்று முதல்வர் ஜெயலலிதாவை தாக்குவது போல பக்கத்தில் போய்விட்டு படுவேகத்தில் ஜகா வாங்கிக் கொண்டு திரும்ப ஓடி வந்தார்.
தொடர்ந்து பேசியவர், காஞ்சி மடத்தைக் காப்பாற்ற கருணாநிதிக்கு திடீரென பாசம் பொத்துக் கொண்டு வருகிறது என்றுதிமுகவைத் தாக்க ஆரம்பித்துவிட்டார்.
வழக்கமாக பா.ஜ.கவை ஆதரிக்கும் துக்ளக் ஆசிரியர் சோ கூட, இந்த விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்துதெரிவிக்கவில்லை. தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், போதிய ஆதாரம் இல்லாமல் இந்தக் கைதைஜெயலலிதா நடத்தியிருக்க மாட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications