காஞ்சி மடம் அருகே ஆர்ப்பாட்டம்: போலீஸ் உஷார் !
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மக்கள் மன்றம் என்ற அமைப்பின் சார்பில் ஜெயேந்திரர் கைதை ஆதரித்து இன்று போராட்டம் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளதால் சங்கர மடம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெயேந்திரர் கைதை ஆதரித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மக்கள்மன்றம் என்ற அமைப்பின் சார்பில் ஜெயேந்திரர் கைதை ஆதரித்தும், அவரை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது என்றுகோரியும் சங்கர மடம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சங்கர மடம் அருகே போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.
இருப்பினும் முன்னெச்சக்கை நடவடிக்கையாக சங்கர மடம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அரசு வழக்கறிஞர்கள் மீது ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள் நடத்தியதாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாரணை முடிவடைந்து திரும்பிய அரசுவழக்கறிஞர்களை, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் ஆகியவற்றின் தொண்டர்கள் கடுமையாக தாக்கினர். அவர்களைவழக்கறிஞர்களும் பதிலுக்குத் தாக்கினர்.
இத் தாக்குதலுக்குக் கண்டனம் தெவித்து மதுரையில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னை வழக்கறிஞர்களைத் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். ஜெயேந்திரருக்கு சிறையில் சிறப்புச் சலுகைகள்வழங்கக் கூடாது என்று அவர்கள் கோரினர்.












Click it and Unblock the Notifications