பாஜகவுக்கு ராமதாஸ், வாசன் கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பா.ஜ.கவுக்கு ஒரு காலத்தில் இந்துத்துவா வீராங்கனையாக காட்சியளித்த ஜெயலலிதா தான் இன்று சங்கராச்சாரியாரை கைதுசெய்ய ஆணையிட்டிருக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை விவரம்:

கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பிஜேபி, ஆர்எஸ்எஸ் ஆகியவை கூச்சலிடுகின்றன.

மத வெறி சக்திகளின் பிரதிநிதியான நரேந்திர மோடிக்கே நேரில் சென்று வாழ்த்து கூறியவர் தான் முதல்வர் ஜெயலலிதா. அன்றுபிஜேபிக்கு இந்துத்துவா வீராங்கனையாக காட்சியளித்த ஜெயலலிதா தான் இன்று சங்கராச்சாரியாரை கைது செய்யஆணையிட்டிருக்கிறார்.

இந்தக் கைதில் சோனியா காந்தியை சம்பந்தப்படுத்தி பேசிவது அரசியல் அநாகரீகம் என்பதை பிஜேபியினர் உணர வேண்டும்.இந்த முடிச்சுபோடும் வேலை தமிழக மக்களிடம் எடுபடாது.

சங்கராச்சாரியாருக்காக நீதித்துறையையே நிர்பந்தப்படுத்தும் முயற்சியில் விஎச்பி, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்இறங்கியிருக்கின்றன. அரசியலில் மதத்தைக் கலந்து நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் வேலையைச் செய்து வரும் பா.ஜ.க.இந்த விவகாரத்தை திசை திருப்ப முயல்கிறது என்று கூறியுள்ளார் வாசன்.

ராமதாஸ் தாக்கு:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சங்கராச்சாரியார் கைது விவகாரத்துக்கு இந்துத்துவா அமைப்புகள் மதம் மற்றும் அரசியல் சாயம் பூசி உண்மையை மறைக்கவும்,பிரச்சனையை திசை திருப்பவும் முயல்கின்றன. கொலைக்கான அசைக்க முடியாத ஆதரங்களை வைத்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா தீவிரமான கடவுள் பக்தி கொண்டவர். இதுவரை முதல்வராக இருந்தவர்களிலேயே அதிகமாககோவிலுக்குப் போய் வழிபட்ட, யாகம் நடத்திய முதல்வர் என்ற பெயர் பெற்றவர்.

காஞ்சி மடத்தின் மீதும் சங்கராச்சாரியார் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர். மடத்துக்கும் போய் வந்தவர்.அப்படிப்பட்டவரே சங்கராச்சாரியாரை கைது செய்ய அனுமதி தந்திருக்கிறார் என்றால், அவருக்கு எதிராக போலீஸ்எப்படிப்பட்ட ஆதரங்களைக் காட்டியிருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

அது ஒரு கொலை வழக்கு. இதற்கு மதச் சாயம் பூசுவது தப்பு. இந்த சட்ட நடவடிக்கையை இந்து மதத்தின் மீதான தாக்குதல் என்றுவர்ணிப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்தக் கும்பல்களுக்குப் பணியாமல் போலீசார் தங்களது விசாரணையை நடத்தி முடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+