கிணற்றில் விழுந்த திருடர்கள் !

Subscribe to Oneindia Tamil

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே திருடிய பொருட்களுடன் தப்பி ஓடிய கொள்ளையர்கள் இரண்டு பேர் 130 அடி ஆழ பாழடைந்தகிணற்றில் விழுந்தனர். இதில் ஒருவன் இறந்தான், இன்னொருவன் படுகாயமடைந்துள்ளான்.

கம்பம் அருகே உள்ளது ஊத்துக்காடு கிராமம். இந்தக் கிராமத்தில் இன்று அதிகாலையில் புகுந்த இரு திருடர்கள் சில வீடுகளில்நகை, பாத்திரங்களைத் திருடிக் கொண்டு அந்தப் பொருட்களுடன் தப்பியோடினர்.

அப்போது கும் இருட்டில் பாழடைந்த விவசாயக் கிணற்றுக்குள் இருவரும் தவறி விழுந்தனர். அந்தக் கிணறு 130 அடிஆழடையது. கிணற்றின் கரடுமுரடான சுவரில் மோதியபடி விழுந்த வேகத்தில் ஒரு திருடன் இறந்து விட்டான். மற்றொரு திருடன்படுகாயமடைந்துள்ளான்.

இன்று காலை தான் இவர்கள் கிணற்றில் விழுந்ததே தெரிய வந்தது. இறந்தவனின் உடலையும் இன்னொருவனையும்தீயணைப்புப் படையினர் மீட்டனர். காயமடைந்த திருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+