சட்டசபையில் பா.ஜ.க. எம்எல்ஏ ராஜா வெளியேற்றம்
சென்னை:
தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. உறுப்பினரான எச்.ராஜா வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். மற்ற பா.ஜ.க.எம்எல்ஏக்கள் தாங்களாகவே வெளிநடப்பு செய்தனர்.
இன்று அவை கூடியதும், சங்கராச்சாரியாரின் கைது குறித்து முதல்வர் ஜெயலலிதா ஒரு விளக்க அறிக்கை வாசிப்பார் எனசபாநாயகர் காளிமுத்து அறிவித்தார்.
இதையடுத்து அறிக்கை படிக்க ஜெயலலிதா எழுந்தார். உடனே பா.ஜ.க. உறுப்பினர்கள் எழுந்து சங்கராச்சாரியாரின் கைதுக்குஎதிராக கோஷமிட்டனர். அவரை உடனே அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றனர்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, முதல்வர் ஜெயலலிதா விளக்க அறிக்கை படிக்கவுள்ளார். இதனால் பா.ஜ.கவினர்அமைதியாக அமர வேண்டும் என்றார். ஆனாலும் பா.ஜ.க எம்எல்ஏக்கள் தொடர்ந்து நின்றபடி கோஷமிட்டனர்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் எழுந்து பா.ஜ.கவினருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால்அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
அப்போது அனைவரும் அமருங்கள், முதல்வர் அறிக்கை வாசிக்கவுள்ளார் என்றார் காளிமுத்து. இதையடுத்து மார்க்சிஸ்ட்உறுப்பினர்கள் அமைதியாயினர்.
ஆனால், பா.ஜ.க எம்எல்ஏக்கள் வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து எழுந்து நின்று கூச்சலிட்டனர்.
அப்போது பேசிய சபாநாயகர் காளிமுத்து, உறுப்பினர் ராஜா உட்கார வேண்டும், இல்லாவிட்டால் வெளியேற்றப்படுவீர்கள்என்றார். வழக்கமாக அதிமுகவுக்கு துதிபாடும் ராஜா அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து கூச்சலிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்களை அழைத்த சபாநாயகர், ராஜாவை வெளியேற்ற உத்தரவிட்டார். உள்ளே விரைந்து வந்தகாவலர்கள் ராஜாவை வெளியே இழுத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து மற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்துவெளிநடப்பு செய்தனர்.
தீவிர அதிமுக ஆதரவாளரான ராஜாவும் அவரது கட்சியினரும் சட்டசபையில் இருந்து வெளியேறுவதும், வெளியேற்றப்பட்டதும்இதுவே முதன்முறையாகும்.
இந்த வெளியேற்றலும் வெளிநடப்பும் நடந்தபோது திமுக உறுப்பினர்கள் முகத்தில் மகிழ்ச்சியையும் புன்சிரிப்பையும் பார்க்கமுடிந்தது.












Click it and Unblock the Notifications