காஞ்சி மடத்தின் கல்லூரியில் போலீஸ் சோதனை

Subscribe to Oneindia Tamil

ஏனாத்தூர்:

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கர மடத்துக்குச் சொந்தமான ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் போலீசார் திடீர்சோதனை நடத்தினர்.

மடத்தின் கேமராமேன் ராமு, சங்கராச்சாரியாரின் வலதுகரமான பசுபதி ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளைத்தொடர்ந்து இந்தக் கல்லூரியில் சோதனை நடந்துள்ளது. கொலை தொடர்பான சில முக்கிய ஆதாரங்கள் இங்கு சிக்கியதாகபோலீசார் தெரிவித்துள்ளனர்.

காஞ்சி மடத்தின் சார்பிலான ஒரு அறக்கட்டளை தான் இந்த கல்லூரியை நடத்தி வருகிறது. கல்லூரியை சோதனையிட்டபோலீசார் பின்னர் அதன் நிர்வாகிகள் இருவரையும் விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

அப்பு சரண்?

இதற்கிடையே கூலிப் படைத் தலைவனான அப்பு (50) ஆந்திர மாநிலம் நகரி நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்ததாக உளவுப்போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவன் தமிழகத்தில் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் சரணடையலாம் என்றுஎதிர்பார்ப்பதாக போலீசார் கூறியிருந்தனர்.

இந் நிலையில் இவன் நகரி நீதிமன்றத்தில் சரணடைந்ததாகத் தெரிகிறது.

சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் அப்புவின் சொந்த ஊர் கேரளா. மலையாளியான இவன் மீது பல கடத்தல் வழக்குகள்உள்ளன. ஆனாலும் சங்கர மடத்துக்கு மிக நெருக்கமானவனாக இருந்து வந்தான்.

இவனது மகன் அமெரிக்காவில் படித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+