ஜெயேந்திரர்: மத்திய அரசிடம் தமிழகம் விளக்கம்
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கு விளக்கம் தெரிவித்து தமிழகஅரசு அறிக்கை அனுப்பியுள்ளது.
சங்கராச்சாரியாரின் கைது குறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருந்தது. இதனையடுத்து தமிழக அரசுவிரிவான அறிக்கை ஒன்றைத் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
அந்த அறிக்கையில், சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் சம்பந்தப்பட்டிருப்பதற்கான முழு ஆதாரம் இருந்ததால்தான்அவரைக் கைது செய்தோம் என்று தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் ஜெயேந்திரர்மீது கூறியிருந்த குற்றச்சாட்டுக்களும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
அதோடு, சங்கரராமன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் கொலையில் ஜெயேந்திரரின் பங்கு உறுதியாகதெரிவதாகவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு, எனவேதான் ஜெயேந்திரர்மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications