காஷ்மீரில் பிரதமர்: படை குறைப்பு ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காஷ்மீரில் ராணுவப் படைகளைக் குறைக்கும் பணி இன்று தொடங்கியது.

காஷ்மீரில் தீவிரவாதிகளின் செயல்கள் பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதையடுத்து அம் மாநிலத்தில்இருந்து படைகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு பாகிஸ்தான் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு,தானும் தனது எல்லையில் இருந்து படைகளைக் குறைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இந் நிலையில் இன்று முதல் படைக் குறைப்புப் பணிகள் தொடங்கிவிட்டன.

எல்லைப் பகுதியில் இருந்து படைகள் பெருமளவில் வாபஸ் பெறப்படும் என்றாலும் காஷ்மீருக்குள் உள்ள படைகள்குறைக்கப்பட மாட்டாது. அது போல தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்தால், உடனே படைகள் அங்கு குவிக்கப்படுவார்கள்என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் இன்று காஷ்மீர் சென்றார். கடந்த 17 வருடங்களில் அந்த மாநிலத்துக்குச் செல்லும் முதல்காங்கிரஸ் பிரதமர் சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

படை குறைப்பை அறிவித்துள்ளதலால், காஷ்மீர் மக்களிடையே பெரும் மகிழ்ச்சி பரவியுள்ள நிலையில் சிங் அங்கு சென்றார்.

காஷ்மீர் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் பொது மக்களுடன் உரையாடவுள்ளார்.

இந் நிலையில் இன்று காஷ்மீரில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் கிரனைட் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் இருராணுவத்தினர் காயமடைந்தனர்.

அதே போல ஸ்ரீநகரில் பிரதமர் பங்கேற்ற விழா நடந்த இடத்திற்கு 200 மீட்டர் தூரத்தில் உள்ள வணிக வளாகத்தில்பதுங்கியிருந்த இரு தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவவீரர்கள் உட்பட 3 பேர் காயம் அடைந்தார்.

படை வாபஸ் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளால் காஷ்மீரில் சகஜ நிலை திரும்புவதை விரும்பாத சில தீவிரவாதஅமைப்புகளே இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருவதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பிரதமர் புனித ஹஸ்ரத் பால் தர்ஹாவில் வழிபாடு செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+