ஓடி ஒளிந்த ஆர்.வி, சேஷன்: ஜெயந்திரர் ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

வேலூர் & சென்னை:

சிறையில் தன்னைச் சந்திக்க வரும் நெருக்கமானவர்களிடம் எல்லாம் ஆர்.வெங்கட்ராமனும் சேஷனும் ஏன் என்னைப் பார்க்கவரவில்லை என்று வருத்தத்தோடு கேட்டுக் கொண்டிருக்கிறார் சங்கராச்சாரியார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

சுவாமிஜியை வைத்து ஏகத்துக்கும் லாபம் அடைந்தவர்கள் என்ற லிஸ்ட் போட்டால் இந்த இருவரது பெயரும் முதலிரண்டுஇடத்தைப் பிடிக்கும். அந்த அளவுக்கு அவர்களுக்கு அதிகார பலம் கொண்ட பதவிகள் கிடைக்க உதவினார். இப்போது இந்தஇருவரும் கண்டுகொள்ளாமல் இருப்பது அவரை வருத்தமடைய வைத்துள்ளது என்கிறார்கள்.

தேர்தல் கமிஷ்னராக இருந்த சேஷன், கட்சி மாறி விஜயேந்திரர் கோஷ்டிக்குப் போய்விட்டதாகவும் புகார் காண்டம்படிக்கிறார்கள் ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள்.

முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனுக்கு மடத்தில் உள்ள அவரது விசுவாசிகள் மூலம் அவ்வப்போது லேட்டஸ்ட் தகவல்கள்போய்ச் சேர்ந்து கொண்டிருக்கின்றன.


வாஜ்பாய்க்கு ஜெ நோஸ்-கட்:

இதற்கிடையே சங்கராச்சாரியார் கைது விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்டெலிபோனில் தொடர்பு கொண்டதாகவும், ஆனால், அவருடன் முதல்வர் பேச மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் விவகாரத்தில் இருந்து ஜெயலலிதாவுடன் போனில் பேசுவது என்றாலே என்று அஞ்சிநடுங்கும் நிலைக்கு வந்துவிட்ட முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி உள்ளிட்ட பிற பா.ஜ.க. தலைவர்கள் முதல்வருடன்போனில் பேசும் திட்டத்தையே கைவிட்டுவிட்டார்கள் என்கிறார்கள்.

முரளிமனோகர் ஜோஷி மட்டுமே முதல்வரின் இல்லத்துக்கும் தலைமைச் செயலகத்துக்கும் பேக்ஸ்கள் அனுப்பினாராம். அதில்,சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்காமல், எப்போ கூப்பிட்டாலும் வந்து பார்க்க ரெடி என்று கூறியிருந்தார் ஜோஷி.

அந்த பேக்ஸ்களுக்கு பதில், நோ-ரெஸ்பான்ஸ் தான்.

இந் நிலையில் நேற்று வேலூர் சிறையில் சங்கராச்சாரியாரை சந்தித்த ஜோஷி இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,அத்வானி, ஜஸ்வந்த் சிங், வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். வாஜ்பாயின் இல்லத்தில்45 நிமிடங்கள் இந்தக் கூட்டம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+