ஜெயேந்திரர்: கருத்து கூற சோனியா மறுப்பு
ரே பரேலி:
கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டது குறித்து கருத்துத் தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திமறுத்துவிட்டார்.
இது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனவே நான் கருத்து ஏதும் தெரிவிக்கமுடியாது என்றார் சோனியா.
இந்த விவகாரத்தில் பாஜகவினர் அவர் மீது தாக்குதல் நடத்துவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ஆரம்பத்திலிருந்தே அவர்கள்என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி வருகிறார்கள். இது ஒன்றும் புதிய விஷயமல்ல. அவர்கள் எந்த அளவுக்கு என்னைத்தாக்கிப் பேசுகிறார்களோ, அந்த அளவுக்கு எனக்கும் கட்சிக்கும் நல்லது என்பது கடந்த தேர்தலில் நிரூபணமாகிவிட்டது.
இந்தத் தாக்குதலை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் தனது தலைமையிலான அரசைக் கலைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற முலாயம் சிங் யாதவின்குற்றச்சாட்டை சோனியா மறுத்தார்.












Click it and Unblock the Notifications