சிறையில் என்ன செய்கிறார் சங்கராச்சாரியார்?
வேலூர்:
சிறையில் சங்கராச்சாரியாருக்கு தனியாக சமையல் செய்து தர ஒரு கைதி ஒதுக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வேலூர் சிறையின் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் கூறுகையில்,
வந்த இரு நாட்கள் ஜெயேந்திரர் மிகவும் இறுக்கமாகவே இருந்தார். யாருடனும் பேசவில்லை. ஆனால், இப்போது சகஜமானநிலையில் இருக்கிறார்.
தினமும் அதிகாலையில் எழுந்துவிடுகிறார். ஒரு மணி நேரம் தியானம் செய்கிறார். செய்தித் தாள்களைப் படிக்கிறார். பின்னர்வெந்நீரில் குளித்துவிட்டு பூஜை செய்கிறார். அவருக்கு சமைத்துத் தர பிராமணரான ஒரு கைதியை நியமித்துள்ளேன்.
அவர் காலை உணவாக ராகி கஞ்சி செய்து சங்கராச்சாரியாருக்குத் தருகிறார். பின்னர் தன்னை சந்திக்க வருபவர்களைசூப்பிரண்டின் அறையில் வைத்து சந்திக்கிறார்.
பகல் உணவாக தயிர் சாதம் சாப்பிடுகிறார். சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ராமாயணம் படிக்கிறார். யாராவது வந்தால்சந்தித்துவிட்டு மாலையில் தனது அறை உள்ள பிளாக்கைச் சுற்றி வாக்கிங் போகிறார். இதையடுத்து மீண்டும் பூஜை செய்துவிட்டு,இரவில் சப்பாத்தியோ, பூரியோ செய்து தரச் சொல்லி சாப்பிடுகிறார்.
அவருக்கு அவ்வப்போது மருத்துவ சோதனைகளும் நடத்தப்படுகின்றன.
நம் இந்த சிறை தண்டனை கடவுள் சித்தம் என்று கூறும் சங்கராச்சாரியார், வழக்கில் இருந்து வெளியேறுவேன் எனநம்பிக்கையுடன் கூறுகிறார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்யைை அவர் விரும்பவில்லை. தன்னைப் பற்றி அவர் அவ்வளவாககவலைப்படவில்லை. ஆனால், மடத்தின் பெயருக்கு பெரிய களங்கம் வந்துவிட்டதைச் சொல்லியே வேதனை அடைகிறார்.அவரது வருத்தமே அதுவாகத் தான் உள்ளது.
அவர் இருக்கும் அறை பக்கம் அதிகாரிகள் தவிர வேறு யாரையும் அனுமதிப்பதில்லை என்றார் ஜெயில் கண்காணிப்பாளர்.












Click it and Unblock the Notifications