எஸ்.வி.சேகருக்கு அதிமுக தடா !
சென்னை:
காஞ்சி மடத்தின் அதிதீவிர பக்தர்களில் ஒருவரான எஸ்.வி. சேகரின் அனைத்து நிகழ்ச்சிகளையும் அதிமுக ரத்து செய்துள்ளது.
பா.ஜ.கவில் இருந்து அதிமுகவுக்குத் தாவிய நாடக நடிகர் எஸ்.வி.சேகர் கட்சியின் சார்பில் பொதுக் கூட்டங்கள், நாடகங்கள்நடத்தி வந்தார்.
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது அனைத்து கட்சி நிகழ்ச்சிகளையும் அதிமுக தலைமை ரத்துசெய்துவிட்டது. மேலும் அவரது நாடகங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆர்.விக்கும் நோஸ்-கட்:
அதே போல சங்கராச்சாரியாருக்காக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் போனில்தொடர்பு கொள்ள முயன்றபோது, முதல்வரின் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனே பதில் சொல்லி போனை வைத்துவிட்டார்.
ஆர்.வி. தரப்பில் மீண்டும் மீண்டும் போயஸ் கார்டன் தொடர்பு கொள்ளப்பட்டபோது, ஒரு தடவை சொன்னா புரியாதா என்றுமுகத்தில் அடித்தார் போல பதில் தரப்பட்டுள்ளது.
காஞ்சி மடத்துக்கு மிக நெருக்கமானவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.வி, ஒருமுறை அங்கு நடந்த வருமான வரித்துறைரெய்டைக் கூட தானே தலையிட்டுத் தடுத்தார் என்பது நினைவுகூறத்தக்கது. மடத்துக்குள் நுழைய வருமான வரித்துறையினர்அச்சம் கொண்டபோது, விஜயலட்சுமி என்ற பெண் அதிகாரி தான் ஒரு டீமுடன் உள்ளே புகுந்து சோதனையை ஆரம்பித்தார்.
ஆனால், டெல்லியில் இருந்து ஆர்.வி. கொடுத்த பிரஷ்ஷரால் ரெய்ட் பாதியில் நிறுத்தப்பட்டதோடு, ரெய்ட் நடத்திய அதிகாரிகள்மடத்தில் இருந்து திட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஆனாலும் இப்போது சங்கராச்சாரியாருக்காக ஆர்.வி முழு அளவில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என ஜெயேந்திரரின்தரப்பில் குற்றம் சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. தன்னை ஏன் ஆர்.வி. சிறையில் வந்து சந்திக்கவில்லை என தனதுஆதரவாளர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்கிறார் சங்கராச்சாரியார் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications