நீதிமன்றத்தில் ஜெயந்திரரை சந்திக்க விஜயேந்திரர் திட்டம்
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரரை சந்திக்க நீதிபதியிடம் அனுமதி கோரி இளையவர் விஜயேந்திரர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஜெயேந்திரரை போலீஸ் காவலில் எடுக்க காவல்துறை தாக்கல் செய்துள்ள மனுவின் மீதான விசாரணை இன்று நடக்கிறது.இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார்.
இதற்காக வேலூர் சிறையில் இருந்து சங்கராச்சாரியார் போலீஸ் வேனில் காஞ்சிபுரம் அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டார்.
இந் நிலையில் ஜெயேந்திரரை தனியே சந்தித்துப் பேச அனுமதிக்குமாறு விஜயேந்திரரின் சார்பில் நீதிபதி உத்தமராஜனிடம் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் சங்கர மடத்தின் பணிகளைத் தொடர்ந்து நடத்துவது தொடர்பாக ஜெயேந்திரரிடம் பேசவேண்டியிருக்கிறது என்றும் சீடர் என்ற முறையில் அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஜெயேந்திரர் அடைக்கப்பட்டுள்ள வேலூர் சிறைக்கு இளையவர் இதுவரை போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications