அத்வானி தலைமையில் பா.ஜ.கவினர் உண்ணாவிரதம்
டெல்லி:
காஞ்சி சங்கராச்சாரியார் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டதைக் கண்டித்து முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி இன்றுஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
டெல்லி ஜந்தர் மந்தர் அருகே பா.ஜ.க. தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, முக்தார் அப்பாஸ் நக்வி, நஜ்மாஹெப்துல்லா, வருண் காந்தி (மேனகா காந்தியின் மகன்) ஆகியோருடன் அத்வானி இன்று ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராச்சாரியாரை தமிழக அரசு நடத்தும் விதத்தைத் கண்டித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், அத்வானியும் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமிடம் நேற்று புகார் மனு கொடுத்தனர்.
மேலும் சங்கராச்சாரியார் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டதை கண்டித்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாடு தழுவியதர்ணா, உண்ணாவிரதப் போராட்டங்களுக்கும் பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.
முதல் நாள் உண்ணாவிரதப் போரட்டம் அத்வானியின் தலைமையில் இன்று டெல்லியில் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானபா.ஜ.கவினரும் பங்கேற்றனர்.
முன்னதாக இங்கு பேசிய சுஷ்மா, சங்கராச்சாரியாரின் கைது இந்து மதத்தின் மீதான தாக்குதல். அவரை தமிழக அரசு நடத்தும்விதம் மிக மோசமானது. அவரது நலனுக்காக பிரார்த்தனை செய்யவே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
இந்தப் போராட்டங்களுக்கு தமிழக அரசு மசியாவிட்டால், அடுத்தகட்ட தீவிர நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
டிவி நிருபர் மீது தாக்குதல்:
முன்னதாக இந்த உண்ணாவிரதத்தை பல்வேறு தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பின. அப்போது ஒருதொலைக்காட்சியின் நிருபர், லைவ் கமெண்ட்ரி தந்து கொண்டிருந்தபோது, அவர் கூறிய கருத்தை எதிர்த்து, சில பா.ஜ.க.தொண்டர்கள் அவரைத் தாக்க முயன்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்களை பா.ஜ.க. தலைவர்கள் அடக்காவிட்டால் நிகழ்ச்சியை கவர் செய்வதையேபுறக்கணித்துவிடுவோம் என நிருபர்கள் அனைவரும் கூட்டாக எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அருண்ஜேட்லி உள்ளிட்டோர் தலையிட்டு அந்தத் தொண்டர்களை நிருபர்களிடம் வருத்தம் தெரிவிக்க வைத்தனர்.
சென்னையிலும் அத்வானி போராட்டம்:
நாளை முரளிமனோகர் ஜோஷி தலைமையிலும், திங்கள்கிழமை ஜஸ்வந்த் சிங் தலைமையிலும் டெல்லியில் உண்ணாவிரதம்நடக்கிறது.
திங்களன்று வாஜ்பாய் தலைமையில் டெல்லியில் தர்ணா போராட்டம் நடக்கிறது.
அதே தினத்தில் சென்னையில் அத்வானி தலைமையில் தர்ணா போராட்டம் நடக்கவுள்ளது. பின்னர் கைதுக்கு எதிரான கண்டனபொதுக் கூட்டத்திலும் அத்வானி பேசுகிறார். பின்னர் வேலூர் சிறையிலோ அல்லது காஞ்சிபுரத்திலோ (நீதிமன்ற அனுமதி பெற்று)சங்கராச்சாரியாரை அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த உண்ணாவிரதத்தை பல்வேறு தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பின. அப்போது ஒரு தொலைக்காட்சியின் நிருபர்,லைவ் கமெண்ட்ரி தந்து கொண்டிருந்தபோது, அவர் கூறிய கருத்தை எதிர்த்து, சில பா.ஜ.க. தொண்டர்கள் அவரைத் தாக்கமுயன்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்களை பா.ஜ.க. தலைவர்கள் அடக்காவிட்டால் நிகழ்ச்சியை கவர் செய்வதையேபுறக்கணித்துவிடுவோம் என நிருபர்கள் அனைவரும் கூட்டாக எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அருண்ஜேட்லி உள்ளிட்டோர் தலையிட்டு அந்தத் தொண்டர்களை நிருபர்களிடம் வருத்தம் தெரிக்க வைத்தனர்.
இதே போல ஆந்திராவிலும் இன்று சங்கராச்சாரியாருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தை பா.ஜ.கவினர் நடத்தினர்.
அதிமுகவுடன் கூட்டணி முறிவு:
இதற்கிடையே இன்று ராஞ்சியில் நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராஜ்நாத் சிங், ஜெயலலிதாவின் இந்தக் கைதுநடவடிக்கையால் பா.ஜ.க-அதிமுக இடையிலான கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications